சேலம், மே 16– ஓட்டுநர்கள் பயன்படுத்தும் இருப்பு அறையை இடித்து விட்டு, அங்கு கோவில் கட்டும் சேலம் அரசு விரைவு போக்குவ ரத்து கழக நிர்வாகத்தின் முடிவுக்கு, அங்கு பணியாற்றும் ஓட்டு நர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சேலம் மாநகரம், அஸ்தம்பட்டி பகுதியில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து பணிமனை இயங்கி வருகிறது. இந்த பணிமனையில் 64 பேருந்துகளும், 320க்கும் மேற்பட்ட தொழி லாளர்களும் பணியாற்றி வருகின்றனர். கடந்த காலங்க ளில் பணிமனை நுழைவாயில் அருகே பிள்ளையார் கோவில் ஒன்று சிறிய அளவில் இருந்தது. அதனை அப்புறப்படுத்திய நிர்வாகம், தற்போது அரசு விரைவு போக்குவரத்து பணிம னைக்குள்ளேயே 10 அடிக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு கோவில் கட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. கோவில் கட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் தற்போது போக்குவரத்து ஓட் டுநர், நடத்துநர்களின் பொருட்கள் வைக்கும் இருப்பு அறை யாக செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே இடநெருக்கடியால் பணிமனை முழுவதும் சுகாதார சீர்கேடாக உள்ளது. இத னிடையே, தொழிலாளர்கள் பயன்படுத்தி வரும் இடத்தை யும் இடித்துவிட்டு, அங்கு கோவில் கட்டினால் தொழிலா ளர்கள் தங்களின் பொருட்களை வைக்க இடம் இல்லாத சூழ் நிலை ஏற்படும். இதுகுறித்து அந்த பணிமனை ஓட்டுநர்கள் கூறுகை யில், கோவில் கட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. ஆனால், தொழிலாளர்கள் பயன்படுத்தும் இருப்பு அறையை இடித்துவிட்டு, அந்த இடத்தில் கோவில் கட்டுவது என்பது தவறானது. பணிமனைக்குள் அனைத்து மதத்தின ரும் உள்ளனர். மத நல்லிணக்கத்தோடு செயல்பட்டு வரு கின்றனர். குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த கோவிலை பணி மனை உள்ளே கட்டினால், மற்ற மதத்தினரும் முகம் சுளிக்கும் வகையில் நிலைமை இருக்கும். எனவே தான் எதிர்ப்பு தெரி விக்கிறோம், என்றனர். மேலும், இப்பிரச்சனையில் போக்கு வரத்து மேலாண்மை இயக்குனர் சமூகமான முடிவை எடுக்க வேண்டும். முன்பு இருந்த இடத்திலேயே பீடம் அமைத்து சிலையை வைத்துக் கொள்ளட்டும் என தொழிற்சங்க தலை வர்கள் செல்லப்பன், லியாகத் அலி ஆகியோர் தெரிவித் துள்ளனர்.