திருப்பூர், ஜூலை 6 – அடர்ந்த மலையான வால்பாறையில் தேயிலை எஸ்டேட் முதலாளிகளுக்கு சலு கைகளை அனுமதிக்கும் வனத்துறையினர் ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மலை வாழ் மக்களின் நியாயமான சட்ட உரிமை களை அனுமதிக்க முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்த வஞ்சனைக்கு எதிராக தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் பெரும் போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகின்ற னர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆயிரம் ஆண் டுகளுக்கும் மேலாக பல்வேறு செட்டில் மெண்டுகளில் மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு குடிநீர், வாகன போக்குவரத்து, மின்சாரம், வீடு என எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. நீண்ட கால மாக இம்மக்களை வனத்துறையினர் மனிதர் களாகவே பார்க்காத போக்கு தொடர்ந்து வந் தது. தங்கள் ஆதிக்க அதிகாரத்தை இந்த மக் கள் மீது சுமத்தி சுகம் கண்டு வந்தனர். மலைவாழ் மக்கள் சங்கம் தொடங்கப் பட்டு எண்ணற்ற உரிமைப் போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் இந்த மலைவாழ் மக் களுக்குச் சில உரிமைகளை பெற முடிந்தி ருக்கிறது. குறிப்பாக 2006ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டப்படி வழங்க வேண்டிய அடிப் படை உரிமைகளை கேட்டு இம்மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் வேறு எந்த மலையிலும் விதிக் காத நிபந்தனைகளை விதித்து வனத்துறை தடைகளை ஏற்படுத்தி வருகிறது. வனத்து றையின் நிலைபாட்டை அப்படியே ஏற்றுக் கொள்ளும் வருவாய்த் துறையும், மாவட்ட நிர்வாகமும் கோரிக்கைகளை நிறைவேற்றா மல் காலம் கடத்தி வருகின்றனர். நீண்ட கால மாக தொடர் கோரிக்கைகள், பலகட்டப் போராட்டங்களை நடத்தியும் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அதே சமயம் இதே போன்று அடர்ந்த மலையாக இருக்கும் வால்பாறையில் தேயிலை எஸ்டேட் முத லாளிகளுக்கு பல வசதிகளையும் வனத் துறை அனுமதித்து சலுகை காட்டி வருகி றது.
இந்த நிலையில் தமிழ்நாடு மலைவாழ் மக் கள் சங்கம் தரைப்பகுதியில் இருந்து மலைப் பகுதிக்குச் செல்வதற்கு பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த நடைபாதையில் 2006 ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டப்படி காங் கிரீட் பாதை ஒரு ஹெக்டேருக்கும் குறை வான நிலத்தில் அமைத்திட தடையின்மைச் சான்று வழங்க வேண்டும். ஆறுகளைக் கடந்து செல்லும் மலைவாழ் மக்கள் குடியி ருப்புகளுக்கு பாலம் கட்ட தடையின்மைச் சான்று வழங்க வேண்டும். குடிநீர், சமுதாய நலக்கூடம், பள்ளி, அங்கன்வாடி, நியாயவி லைக் கடை மருத்துவ வசதி, வீட்டு வசதி, செல் போன் கோபுரம், வேளாண்மை செய்ய உதவி, கூட்டுறவு வங்கிக் கடன் வசதி ஆகிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண் டும். வன உரிமைச் சட்டப்படி வழங்கிய பட்டா வில் மக்களுக்கு பயன்படாத நிபந்தனை களை ரத்து செய்ய வேண்டும் என்று வலி யுறுத்தி உள்ளனர். இத்தனை காலமாக நடத்திய போராட் டங்களின் தொடர்ச்சியாக வரும் 12ஆம் தேதி உடுமலை பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு மாவட்ட வனத் துறை அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடத்துவதென தீர்மானித்துள்ள னர். இந்த போராட்டத்தில் தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் தலைமை ஏற்க இருக்கிறார். உடு மலை மலைப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பிலும் இந்த போராட்டத்தில் பங் கேற்பதற்கு மக்கள் ஆயத்தமாகி வருகின்ற னர். வனத்துறை, மாவட்ட நிர்வாகத்தின் வஞ் சகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து உரிமை களை வென்றிடும் முனைப்போடு அவர்கள் தயாராகி வருகின்றனர்.