districts

தலித் இளைஞர் காரில் கடத்தல் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு

திருப்பூர், செப்.10 - திருப்பூர் அருகே பெருந்தொழுவு ஆதி திராவிடர் காலனியில் கல்லூரி மாணவரை ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்றது. அங்கி ருந்தவர்களை தாக்கி காரை ஏற்றிக் கொலை  செய்வதாக மிரட்டி தப்பிச் சென்ற கும்பல் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் அருகே பொங்கலூர் ஒன் றியம், பெருந்தொழுவு கிராமத்தில் உள்ள கோட்டைமேடு ஆதிதிராவிடர் காலனியில் வசித்து வருபவர் குமார். இவரது மனைவி சுதா. கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். முதல்  மகன் பூபாலன் (25), இரண்டாவது மகன்  குணசேகரன் (21). இவர் அவிநாசிபாளை யத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து  வருகிறார். சனியன்று காலையில் குணசேகரன்  வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த போது, காரில் ஒரு கும்பல் வந்தது. திடீ ரென அவர்கள் சுதாவின் வீட்டிற்குள் புகுந்து,  தூங்கிக் கொண்டிருந்த குணசேகரனை அடித்து இழுத்துச் சென்று காரில் ஏற்றி கடத்தினர். பட்டப் பகலில் நடைபெற்ற இந்த  சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த சுதாவின் மாமனார் வீரன், மாமியார் ராசாத்தி மற்றும் அப்பகுதி மக்கள் காரில் வந்தவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அவர் கள் வீரன், ராசாத்தியை தாக்கி விட்டு மற்ற வர்களை சாதியைச் சொல்லித் திட்டி காரை  ஏற்றி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென் றனர். இது குறித்து சுதா அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். காரில் வந்த ஆறு பேர் கும்பல் வீடு புகுந்து தனது மகனை அடித்து இழுத்துச் சென்று கடத்தியதுடன், சாதியைச் சொல்லித் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததால் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். தனது குடும்பத்தாருக்கும், ஊர் மக்களுக்கும் பாது காப்பு வழங்க வேண்டும் என்று சுதா கேட்டுக்  கொண்டார். அதன்பேரில், காவல்துறை யினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில்  வழக்கு பதிவு செய்துள்ளனர்.  குணசேகரனின் உடன்படிக்கும் மாணவர்  ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து  கொள்ள முயன்ற விவகாரத்தில், குண சேகரன் தனது நண்பருக்கு நகை அடகு வைக்க உதவியதாக கூறப்படுகிறது. இந்த  பிரச்சனையில் சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் குணசேகரனை கடத்தியதாக கூறப்படுகிறது. மகன் கடத்தப்பட்டது குறித்து காவல்  நிலையத்தில் புகார் அளித்த சூழ்நிலையில்,  காவலர்கள் விசாரணை மேற்கொண்டு குண சேகரனை மீட்டனர். காரில் கடத்தியவர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.