districts

img

பள்ளி வளாகத்தில் பாஜக பேனரால் சர்ச்சை

கோவையில் பள்ளி வளாகத்திற்குள் பாஜகவினரின் பேனர் வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வெரைட்டி ஹால் பகுதியில் சிட்டி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் பாஜக சின்னம், மோடி, அண்ணாமலை உள்ளிட்டோர் புகைப்படங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி தலைமையாசிரியர் அறிவுறுத்தலை அடுத்து மாணவர்கள் அந்த பேனரை அகற்றினர். பின்னர் பாஜகவினர் பள்ளி வளாகத்திற்கு முன்பாக வைத்தனர்.

பள்ளி வளாகம் முன்பு அனுமதியின்றி பாஜக தொண்டர்கள் வானதி சீனிவாசனை வரவேற்று பட்டாசு வெடித்ததும்,பள்ளி வளாகத்திற்குள் கட்சி சார்பான பேனர் வைத்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.