உதகை, டிச.29- தூய்மைப்பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, ஊட்டி நகராட்சி அலுவலகம் முன்பு சிஐடியு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். ஒப்பந்த ஊழியர்களிடம் பிடித்தம் செய்த பிஎப், இஎஸ்ஐ, தொகையினை உடனடியாக செலுத்த வேண்டும். பழுதடைந்துள்ள குப்பை வண்டி கள் சரி செய்ய வேண்டும். ஆட்சி யர் அறிவித்த குறைந்தபட்ச ஊதி யத்தை உடனடியாக வழங்க வேண்டும். தூய்மைப்பணியாளர் களுக்கு தேவையான உபகரணங் கள் வழங்குவது உள்ளிட்ட கோரிக் கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத் தப்பட்டது. இதில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். கௌரவத் தலை வர் சங்கரலிங்கம், பொதுச்செயலா ளர் சேகர், பொருளாளர் சங்கர், சிஐடியு மாவட்டப் பொருளாளர் நவீன் சந்திரன் மற்றும் தூய்மைப்பணி யாளர்கள் திரளானோர் பங்கேற் றனர். கோவை இதேபோன்று, ஒப்பந்த பணி யாளர்களுக்கு சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பின் படி குறைந்தபட்ச ஊதி யத்தை உறுதி செய்திட வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவல கம் அருகே ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத் தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில், சங்கத்தின் மாவட்டத் தலை வர் ராஜா கனி தலைமை வகித்தார். சங்கத்தின் பொதுச்செயலாளர் கே. ரத்தினகுமார் மற்றும் சிஐடியு நிர்வா கிகள் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.