தருமபுரி, டிச.14- பள்ளிகளில் குழந்தை பாது காப்பு குழுக்களுக்கும், கிராம குழந்தை பாதுகாப்பு குழுக்களுக் கும் பயிற்சி அளிக்கப்படும் என தமிழ் நாடு குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் வீ.ராமராஜ் தெரிவித் துள்ளார். தருமபுரி மாவட்டம், வத்தல் மலைக்குட்பட்ட பெரியூர் கிராமத் தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளி, அங்கன்வடி, சத்துணவு மையங்களில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் வீ.ராமராஜ் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின், அப்பள்ளிகளில் குழந்தை பாதுகாப்பு குழுக்களை வலுப் படுத்துதல் தொடர்பாக ஆலோ சனை கூட்டமும், மாணவ, மாணவி யருக்கு குழந்தை பாதுகாப்பு விழிப் புணர்வு கூட்டமும் நடைபெற்றது. அப்போது குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் போன்ற வற்றின் தீமைகள் பற்றி எடுத்துரைக் கப்பட்டது.
இதன்பின், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை கள் பாதுகாப்பு குறித்த ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் ச.திவ்ய தர்சினி, மாவட்ட குழந்தை பாது காப்பு அலுவலர் சிவகாந்தி, மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத் தில், தமிழ்நாடு குழந்தை உரிமை கள் ஆணைய உறுப்பினர் வீ.ராம ராஜ் கலந்து கொண்டு பேசுகை யில், அனைத்து பள்ளிகளிலும் குழந் தைகளுக்கான பாதுகாப்பு குழுக் களை அமைக்க வேண்டும் என சமீ பத்தில் பள்ளி கல்வித்துறை அர சாணை வெளியிட்டுள்ளது. தரும புரி மாவட்டத்தில் உள்ள அனைத் துப் பள்ளிகளின் குழந்தைகள் பாது காப்பு குழுக்களுக்கு விரைவில் தக்க பயிற்சி வழங்கப்படும். இதேபோல் ஊரக பகுதிகளில் சமூக நலத்துறை அரசாணைப்படி அமைக்கப்பட்டுள்ள கிராம, வட் டார மற்றும் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் களும், நகர பகுதிகளில் அமைக் கப்பட்டுள்ள மாநகர மண்டல அள விலான, நகர மற்றும் பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாது காப்பு குழுக்களும் உரிய பயிற்சி அளித்து அவை வலுப்படுத்தப்பட வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம குழந்தைகள் பாதுகாப்பு குழு செயலாளர்களுக்கு விரைவில் பயிற்சி வழங்கப்படும், என்றார்.