districts

img

திருப்பூரில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூலை 8- பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி, 5ஜி சேவை வழங்க வலியுறுத்தி பிஎஸ்என்எல் அனைத்து ஊழியர்களின் கூட்டமைப்பு சார் பில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி 5ஜி சேவை வழங்க வேண்டும், மூன்றாவது ஊதிய மாற்றம் செய்ய வேண்டும், புதிய  பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட  மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் அனைத்து ஊழியர்கள் கூட்ட மைப்பு சார்பில் டெல்லியில் வெள்ளியன்று பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணிக்கு ஆதரவாக திருப்பூர் பிஎஸ்என்எல் அலு வலகத்தின் முன்பு என்எப்டிஇ மாவட்ட தலை வர் அந்தோணி மரிய பிரகாஷ் மற்றும் பிஎஸ் என்எல்இயு கிளை செயலாளர் சங்கலிதுரை ஆகியோரின் கூட்டுத் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில், பிஎஸ்என்எல்இயு மாநில உதவி  செயலாளர் சுப்பிரமணியன், கிளை தலைவர்  குமரவேல், ஏஐபிடிபிஏ கிளைச் செயலாளர் விஸ்வநாதன் உட்பட பலர் பங்கேற்றனர் முடி வில் கிளைச் செயலாளர் அருண்குமார் நன்றி  கூறினார்.