districts

img

யானையிடமிருந்து தப்பித்த இருசக்கர வாகன ஓட்டி

நீலகிரி, செப்.4- கூடலூரில் இருந்து வய நாடு செல்லும் சாலையை கடந்த காட்டு யானையிடமி ருந்து இருசக்கர வாகனத் தில் சென்றவர்கள் நூலிழை யில் உயிர்த்தப்பினர். நீலகிரி மாவட்டம், கூட லூரில் இருந்து கேரள மாநி லம் செல்லக்கூடிய சாலை  பெரும் வனப்பகுதிகள் என்பதால் அவ்வப்போது காட்டு  யானைகள் சாலைகளை கடந்து செல்கின்றன. இதுதொடர் பாக வனத்துறை சார்பில் அறிவிப்பு பலகைகளும் வைக்கப் பட்டுள்ளன. இந்நிலையில், வியாழனன்று பால்மேடு எனும் பகுதியில் காட்டு யானை வனப்பகுதியில் இருந்து  சாலையைக் கடந்து மறுபகுதிக்கு செல்லும் போது இரு சக்கர  வாகனத்தில் வந்த கேரள மாநில சுற்றுலாப் பயணிகள் காட்டு  யானையிடமிருந்து நூலிழையில் உயிர்தப்பித்தனர்.  இருசக்கர வாகனம் வருவதை கண்ட காட்டு யானை ஆக் ரோஷத்துடன் பிளிறியபடி சாலையை கடந்து தேயிலைத்  தோட்டத்திற்குள் சென்றது.இந்த வீடியோ காட்சிகள்  தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.