districts

பீகார் மாநிலத் தொழிலாளி குத்தி கொலை? - தொழிலாளர்கள் போராட்டம்!

திருப்பூர், மே 15- திருப்பூரில் பீகார் மாநிலத் தொழிலாளி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளி மரணத்திற்கு நீதி கேட்டு சக புலம்பெயர் தொழிலாளிகள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். திருப்பூர் கணியாம்பூண்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பனியன் நிறு வனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட புலம்பெ யர் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்ற னர். இவர்கள் தங்குவதற்கு ஏதுவாக நிறு வனத்தின் அருகாமையில் பணியாளர் குடி யிருப்பு ஏற்படுத்தப்பட்டு அங்கு தங்க வைக் கப்பட்டுள்ளனர். இந்த நிறுவனத்தில் பீகார்  மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் குமார் (22) என்ற இளைஞர் பணியாற்றி வரு கிறார். செவ்வாயன்று இரவு பணி முடிந்து  தனது அறைக்கு தனியே சென்று கொண்டி ருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் அவரை சுற்றிவளைத்து செல் போனை பிடுங்க முயன்றதாகவும்,  ஆகாஷ்  குமார் செல்போனை தர மறுத்ததால் மூன்று  பேரும் சேர்ந்து அவரை கத்தியால் குத்தி விட்டு செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.   பலத்த காயமடைந்த ஆகாஷ் அங்கி ருந்து தப்பி தனது நண்பர்களை சந்தித்து  நடந்த விஷயங்களை கூறி உள்ளார். என்ன செய்வது என தெரியாத புலம் பெயர்  தொழிலாளர்கள் தங்கள் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத்தொ டர்ந்து, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆகாஷ், அங்கு சிகிச்சை பலனின்றி புதனன்று காலை உயிரி ழந்தார். இதையறிந்த சக புலம்பெயர் தொழிலா ளர்கள் நிறுவனத்தின் உள்ளே போராட் டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த  போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்ப குதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட  அனைத்தும் சோதனை செய்யப்பட்டு வரு வதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது  செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து சக தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

;