வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் தடுப்பு சுவர்
மேட்டுபாளையம், ஜன. 13- மேட்டுப்பாளையம் அருகே உயர்மட்ட பாலம் தடுப்பு சுவர் இடிந்து வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை பகத்தூர் பகுதியில் சுமார் 20 அடி உயரம் கொண்ட உயர் மட்ட பாலம் உள்ளது. சிறுமுகை - புளியம்பட்டி இணைப்பு சாலையாக உள்ள பகுதியில் ஏழு எருமை பள்ளத்தின் குறுக்கே இந்த பாலம் கட்டப்பட்டது பகத்தூர், புங்கம்பாளையம், இடுகம்பாளையம், இலுப்பநத்தம் உள் ளிட்ட பல்வேறு கிராம மக்கள் இந்த பாலத்தை கடந்தே மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதிகளுக்கு வர முடியும். இந்த நிலையில், இந்த பாலம் சில மாதங்களுக்கு முன் சிதைவடைந்து வந்த நிலையில், தற்போது பாலத்தின் பக்க வாட்டு தடுப்பு சுவர் முழுவதும் பெயர்ந்து இடிந்து விழுந் துள்ளது. இதனால் அந்த பாலத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் பாலத்தை கடக்கின்றனர். மேலும், தடுப்பு சுவர் இல்லாமல் இருப்பதால் இரவு நேரங் களில் பாலத்தில் இருந்து தவறி விழுந்த சம்பவமும் நடை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, பொதுமக்களின் உயிர் பலி ஏற்படும் முன்பு இந்த பாலத்தை மாவட்ட நிர்வாகம் சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அதிக சப்தம்: வியாபாரி மீது தாக்குதல்-கைது
கோவை, ஜன.13- போக்குவரத்து நெரிசலில் அதிக சப்தம் எழுப்பியதை கண்டித்தவர் மீது தாக்குதல் நடத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை - இடையர் வீதியை சேர்ந்தவர் மனோகரன் (52). இவர் ராஜா வீதியில் சிறுதானிய கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று மனோகரன் இரு சக்கர வாகனத்தில் இடையர் வீதிக்கு சென்றார். அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் இருசக்கர வாக னத்தை நிறுத்தி காத்திருந்தார். அப்போது பின்னால் நின்ற ஆட்டோ ஒட்டுநர் தனக்கு வழி விடுமாறு தொடர்ந்து ஹார்ன் அடித்தார். இதனை மனோகரன் கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ஆட்டோ ஒட்டுநர், மனோகரனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். மேலும் தான் வைத் திருந்த கத்தியை காட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றுள் ளார். இதுகுறித்து மனோகரன் கடைவீதி போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், மனோகரனை தாக்கியது கோவை-செல்வபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் தினேஷ் (26) என்பது தெரியவந்தது. இதை யடுத்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
முழு மானியத்தில் கிணறு, மோட்டார், பாசன வசதி அமைக்க அழைப்பு
ஈரோடு, ஜன.13- நூறு விழுக்காடு மானியத்தில் கிணறுகள், அமைத்து சூரிய சக்தி மூலம் இயக்கப்படும் பம்ப் செட்டு (அ) மின் மோட்டாருடன் நுண்ணீர்ப் பாசன வசதி அமைத்துத் தரும் திட்டத்தில் பயன்பெற ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பாசன நீர் ஆதாரங்களை புதிதாக உரு வாக்கி அதிக விளைச்சல் பெற வேண்டும் என்ற நோக்கத் துடன் ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ரூ.12 கோடி செலவில் மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்துத் தரப்படும். அதன் அடிப்படையில், தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் 200 சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல் படுத்தப்படும். ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் பர்கூர், கோபி, கூகலூர் குறு வட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதில் பயன்பெற வருவாய் துறையின் மூலம் வழங்கப் பட்ட சாதி சான்று வேண்டும். சூரிய சக்தி மூலம் இயக்கப் படும் (10 கேவி) பம்பு செட் அமைத்திட வேண்டும். மேலும் விபரங்களுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களை அணுகலாம்.
குழந்தைகளுடன் சென்ற தாய் காணவில்லை - கணவர் புகார்
கோவை, ஜன.13- விளையாட்டு போட்டிகளில் பரிசு பெறச்செல்வதாக கூறி விட்டு குழந்தைகளுடன் சென்ற மனைவி காணவில்லை என கணவர் புகாரளித்துள்ளார். காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (42). இவரது மனைவி ரேவதி (36). இவர்களுக்கு 2 பெண் குழந் தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வந்து, வெள்ளலூர் பேச்சியம்மன் கோவில் வீதியில் வசித்து வருகின்றனர். இருவரும் பொள்ளாச்சி ரோடு சுங்கச்சாவடி அருகே ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வருகின்றனர். குழந்தைகள் 2 பேரும் வெள்ளலூர் அரசு பள்ளியில் படித்து வருகின் றனர். இந்நிலையில், கடந்த 10ஆம் தேதியன்று ரேவதி தனது கணவர் பன்னீர்செல்வத்திடம், இரண்டாவது மகள் பள்ளியில் நடைபெற்ற போட்டியில் வென்றதாகவும், அதற்கான பரிசினை சென்னையில் உள்ள ஒரு அரங்கில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறி கொண்டு, 2 குழந்தை களையும் அழைத்து சென்னைக்கு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பன்னீர்செல்வம் தனது மனைவி ரேவதியை தொலைபேசியில் அழைத்தார். ஆனால் செல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங் களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் அவர் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரேவதி மற்றும் அவரது 2 குழந்தைகளை தேடி வருகின்றனர்.
கோவையில் வாலிபர் சடலமாக மீட்பு
கோவை, ஜன.13- கோவை - செட்டிபாளையம் அருகே வாலிபர் சடலமாக மீட்டெடுத்த சம்பவத்தில் நண்பரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை-செட்டிபாளையம், பெரிய குயிலி இடும்பன் கோவில் அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காலியிடத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலை யில் ஆண் பிணம் கிடப்பதாக அப்பகுதி வழி யாக சென்ற பொதுமக்கள் செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் மேற் கொண்ட முதல் கட்ட விசாரணையில் பிண மாக மீட்கப்பட்ட நபர் பீகார் மாநிலத்தை சேர்ந்த லாலம் கேவத் (37) என்பதும், அவர் சூலூர், தென்னம்பாளையம் விஷாகா நகர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி, கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும், இறந்து போன நபருக்கு 4 குழந் தைகள் உள்ளனர். இந்நிலையில் லாலம் கேவத் கடந்த 8ஆம் தேதி பணிக்குச் சென் றவர் வீடு திரும்பவில்லை என்பதும், குடும்பத் தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் செட்டிபாளையம் பகுதியில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சம்பவத்தன்று லாலம் கேவத் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஊட்டி யை சேர்ந்த சார்லஸ் (35) என்பவருடன் மதுக்குடிக்க சென்றதும், திரும்பி வந்தபோது சார்லஸ் மட்டும் வந்துள்ளார். இதுகுறித்து குடும்பத்தினர் அவரிடம் கேட்டுள்ளனர். அதில், லாலம் கேவத் குடிபோதையில் படுத்துவிட்டார் அதனால் நான் மட்டும் வந்து விட்டேன் என்றுள்ளார். அதன்பின்னர் அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து தலைமறை வாகிவிட்டார். இதனால், சந்தேகத்தின் பேரில் போலீசார் தலைமறைவான சார்லசை தேடி வருகின்றனர். அவர் கிடைத்த பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
ஏற்றுமதி வருவாயில் 1 சதவிகிதம் உள்கட்டமைப்பு நிதி வழங்க கோரிக்கை
திருப்பூர், ஜன. 13 – திருப்பூரின் வருடாந்திர மொத்த ஏற்றுமதி வருவாயில் 1 சதவிகிதம் தொகையை உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ஒதுக்கீடு செய்யும்படி திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கோரி யுள்ளது. ஒன்றிய அரசின் பட்ஜெட்டிற்கு முந்தைய கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலை வர் கே.எம்.சுப்பிரமணியம், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைத்தார். அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள் தற்போதைய நெருக்கடியான சூழலில் வாழ்வா, சாவா என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதில் நிதி நெருக்கடி கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தி வருகி றது. எனவே ஏற்றுமதி கடனுக்கான வட்டி மானியத்தை சிறு, குறு, நடுத்தர ஏற்றுமதியாளர்களுக்கு 3 சதவிகிதமும், அது அல்லாத பிற நிறுவனங்களுக்கு 2 சதவிகிதமும் வழங்கப்ப டுவதை அடுத்த 2024ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீடிக்க வேண்டும். அத்துடன் வட்டி மானியத் திட்டத்தை 5 சதவி கிதம் அளவுக்கு உயர்த்தி வழங்க வேண்டும். மூலதனப் பொருட்கள் இறக்குமதி திட்டத்தில் வாங்கிய இயந்திரங்கள், மூலப்பொருட்கள் விசயத்தில் உரிய ஏற்று மதி அம்சங்களை எட்ட முடியாமல் சில நிறுவனங்கள் பாதிக் கப்பட்டுள்ளன. இதனால் வழக்கமான சுங்கத் தீர்வையுடன், கூடுதல் வட்டியையும் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட் டுள்ளது. இதை கருத்தில் கொண்டு சமரசத் தீர்வு திட் டத்தை நிதி அமைச்சர் அறிவிக்க வேண்டும். அத்துடன் ஏற்றுமதி கடன் உத்தரவாதத் திட்டத்தில் நடப் பில் உள்ள கடன் அளவில் 10 முதல் 20 சதவிகிதம் வரை கடன் வழங்குவதற்கு சிறப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும்.ஏற்றுமதி தொழில் மையங்களில் தேவையான உள்கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அந்தந்த மையங்க ளின் வருடாந்திர மொத்த ஏற்றுமதி வருவாயில் 1 சதவிகி தம் தொகையை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேற்சொன்ன இந்த திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிப் பதன் மூலம் லட்சக்கணக்கானோரின் வேலை வாய்ப்பைப் பாதுகாப்பதுடன், சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை யினரையும் பாதுகாக்க முடியும். ஏற்றுமதி அளவையும் அதிக ரிக்க முடியும் என்று கே.எம்.சுப்பிரமணியம் கூறியிருக் கிறார்.
அரசு கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா
திருப்பூர், ஜன.13- அவிநாசி அரசு கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஜன 15 ஆம் தேதி தமிழா்களின் பாரம்பரிய பண்டிகை யான பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. திருப்பூா் மாவட்டம் அவிநாசியில் உள்ள அரசு கலை அறிவியல் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் இணைந்து சமத் துவ பொங்கல் விழா கொண்டாடினர்.
பாலத்தடுப்பு மீது மோதி தீ பிடித்து எரிந்த கார்
அவிநாசி, ஜன.13- சேவூர் அருகே லூர்துபு ரத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத் தடுப்புச் சுவரின் மீது மோதி தீப்பி டித்து எரிந்தது. திருப்பூர் - வலையங் காடு பகுதியைச் சோ்ந்தவா் அஸ்வின்குமார். இவர் புளி யம்பட்டியிலிருந்து திருப் பூர் நோக்கி தனது காரில் வியாழக்கிழமை சென்று கொண்டிருதார். லூர்புதுரம் அருகே சென்றபோது, கட் டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்புச் சுவா் மீது மோதி சாலையின் நடுவே தீப் பிடித்து எரிந்தது.சுதாரித் துக்கொண்ட அஸ்வின்கு மார் காரில் இருந்து உடன டியாக இறங்கியதால் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினர்.
ஜனவரி 26 திருப்பூரில் டிராக்டர் பேரணி ஐக்கிய விவசாயிகள் முன்னணி முடிவு
திருப்பூர், ஜன.13 - மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும் பப் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை ஏற்றுக் கொண்ட ஒன்றிய மோடி அர சாங்கம், எழுத்துப்பூர்வமாக கையெழுத் திட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றாததைக் கண்டித்து, ஜனவரி 26 இல் திருப்பூரில் டிராக் டர் மற்றும் வாகன அணிவகுப்புப் பேரணி நடத்தப்படும் என்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறிவித்துள்ளது. திருப்பூர் மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி நிர்வாகிகள் கூட்டம் வியாழனன்று ஊத்துக்குளியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.சின்னசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் மூன்று வேளாண் விரோத சட்டங்க ளுக்கு எதிராக ஓராண்டுக்கு மேலாக விவசா யிகள், தலைநகர் டெல்லியில் நடத்திய போராட்டத்தின் நிறைவில் வேளாண் விளை பொருட்களுக்கு சட்டரீதியாக குறைந்தபட்ச ஆதாரவிலை, மின்சார சட்ட திருத்த மசோ தாவை திரும்பப் பெறுதல், போராட்டத் தில் உயிர் நீத்த விவசாயிகளின் குடும்பங் களுக்கான இழப்பு உதவி நிதி அளிப்பது, போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறுவது உள் ளிட்ட ஒன்றிய மோடி அரசாங்கம் எழுத்துப் பூர்வமாக கையெழுத்திட்டு ஏற்றுகொண்ட ஒப்பந்தத்தை இதுவரை நிறைவேற்றா ததைக் கண்டித்து, இதை உடனே நிறை வேற்றிட கோரி அனைத்து மாவட்ட தலைந கரங்களிலும் உழவர்கள் திரளாக பங்கேற் கும் டிராக்டர் மற்றும் வாகன, இருசக்கர வாகன அணிவகுப்பு நடைபெறுகிறது. அதன் அடிப்படையில் திருப்பூர் மாவட் டத்தில் ஜனவரி 26 அன்று மதியம் 2 மணிக்கு வடக்கு பகுதி பூலுவபட்டி நால்ரோட்டிலி ருந்தும், தெற்கு பகுதி பல்லடம் நால்ரோடு சிக் னல் அருகிலிருந்தும், இரு அணிகள் புறப் பட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு வந்தடைந்து, மாலை 4 மணிக்கு கோரிக்கை விளக்க கூட்டம் நடைபெறும். இதில், அனைத்து விவசாயிகள், விவ சாய தொழிலாளர்கள், அமைப்புகளையும் அழைப்பது என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார், மாவட்ட துணைத் தலைவர் ஜி.கே.கேசவன் உள்ளிட் டோர் கலந்துகொண்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:47.85/60அடி நீர்வரத்து:830கன அடி வெளியேற்றம்:1044கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 85.27/90அடி. நீர்வரத்து:111கனஅடி வெளியேற்றம்:445கன அடி
அகழியை தாண்டி ஊருக்குள் நுழையும் வனவிலங்குகள்
கோவை, ஜன.13- மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய கிராமங்களில் அகழியை தாண்டி யானைகள் ஊருக்குள் நுழைவதால் பொதுமக்கள், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர், சோமைய னூர், கரடிமடை, ஆனைகட்டி சின்ன தடாகம் உள்ளிட்ட கிராமங்களுக்குள் சமீப காலமாக வனவிலங்குகள் நுழைந்து விடுகிறது. குறிப்பாக யானைகள் கூட்டமாகவும், ஒத்தை யாகவும் வருகிறது. இரவில் வந்த யானைகள், தற்போது பகல் நேரங்களில் அடிக்கடி வருகிறது. இதனால், இப்பகுதி மக்கள் அச்சத்துடனே நாட்களை நகர்த்தும் நிலையில் உள் ளனர். கிராமங்களுக்குள் நுழையும் யானைகள், விவசாய நிலத்திற்குள் புகுந்து சோளம், கரும்பு, வாழை போன்ற தானிய பயிர்களை சாப்பிட்டுவிட்டு பொருட்செதத்தையும் உயிர் சேதத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், புதனன்று தடாகம் பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள நரசிம்மராஜு தோட்டத்தில் இரண்டு யானைகள் உள்ளே புகுந்து பப்பாளி, சப்போட்டா போன்ற மரங்களை சேதப்படுத்தியுள்ளது. இதனையடுத்து இப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத் துறையினர் விரைந்து வந்து யானையை காட்டுக்குள் விரட்டினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், யானை ஊருக்குள் வராமல் இருக்க, பத்து வருடங்களுக்கு முன்பு அகழி வெட்டினார்கள். அந்த அகழிகள் முறையான பரா மரிப்பு இல்லாததால் யானைகள் அந்த அகழிகளைத் தாண்டி ஊருக்குள் வந்து விடுகின்றன. அகழிகளை முறையான பராமரிப்பு செய்தால் யானை ஊருக்குள் வருவது கட்டுப் படும். மேலும், யானைகளின் வலசைப்பாதையில் ஆக்கி ரமிப்புகள் அதிகரித்துள்ளது. இதனை முறைப்படுத்தினால் ஊருக்குள் வருவது குறையும் என்றனர்.
கத்தியை காட்டி செல்போன் பறிப்பு - 9 பேர் கைது
சூலூர், ஜன.13- சூலூர் அருகே வட மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த அறையில் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட 9 பேரை காவல்துறை யினர் கைது செய்தனர். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே சங்கோதி பாளையம் உள்ளது. இங்கு பயங்கர ஆயுதங்களுடன் வீட்டின் கூரையின் மீது ஏறி ஓட்டை பிரித்து உள்ளே இறங்குவதும், வடமாநில நபர்கள் தங்கி இருக்கக்கூடிய இடங்களை குறி வைத்து ஒரு கும்பல் திருட முயற்சித்துள்ளதும் தெரியவந்தது. இந்த திருட்டு முயற்சியில் இரண்டு செல்போன்கள் மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இது தொடர்பான கண் காணிப்புக் கேமராக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இந்த கண் காணிப்புக் கேமராக் காட்சிகளை கொண்டு கருமத்தம் பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இளைஞர்களை செல்போன் சிக்னல்களை வைத்து தேடி வந்தனர். இந்நிலையில், தனிப்படை போலீசார் கருமத்தம்பட்டி, அன்னூர் எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இளைஞர் ஒருவர் அப்பகுதியில் சென்று கொண்டிருந்தார். அவரைப் பிடித்து விசாரணை மேற் கொண்ட போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த அந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்து வந்து விசா ரணை மேற்கொண்டனர். அப்பொழுது சங்கோதி பாளையம் பகுதியில் திருட்டில் ஈடுபட்ட கும்பலில் ஒருவர் என்பது தெரிய வந்தது. பின்னர், அந்த இளைஞர் அளித்த தகவலின் பேரில் பதும் பள்ளி காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த ஆறு நபர்களை காவல்துறையினர் பிடிக்கச் சென்றனர். அப்போது, அங்கு இருந்த 8 பேரும் தப்ப முயற்சித்தனர். கருமத்தம்பட்டி காவல் துறையினர் துரத்தி அந்த 8 பேரையும் பிடித்துள்ளனர் பின்னர் 8 பேரையும் கருமத்தம்பட்டி காவல் நிலையம் அழைத்து வந்து விசரணை மேற்கொண்டத்தில், சத்தியமங்கலம் பகுதி யைச் சேர்ந்த வாஞ்சிநாதன், விஜயராஜ், ரோகித், தாகிர், உசேன், திருமலை, கார்த்திக் உள்ளிட்ட மூன்று சிறுவர் களும் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் திருடிய 17 செல்போன் மற்றும் கொள்ளைக்குப் பயன்படுத்திய 3 கத்தி 3 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் ஒன்பது பேரையும் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறுவர்கள் முவரையும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் மற்ற 6 பேரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மஞ்சூர் - கெத்தை சாலையில் பேருந்தைமறித்த யானை கூட்டம்
உதகை, ஜன.13- நீலகிரி மாவட்டத்தில் இருந்து கோவைக்கு செல்ல மூன்றாவது வழித் தடமாக மஞ்சூர் -கெத்தை சாலை உள்ளது. அடர்ந்த வனப்பகுதி என்ப தால் யானை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இவ்வழியாக அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில் குட்டி யுடன் யானை கூட்டம் ஒன்று மஞ்சூர் -கெத்தை வனப்பகுதியில் முகாமிட் டுள்ளது. அவை அவ்வப்போது சாலை யில் உலா வருகின்றன. இந்நிலையில், வெள்ளியன்று காலை சாலையில் யானை கூட்டம் உலா வந்துள்ளது. நீண்ட நேரம் சாலையில் நடந்து பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. பயணிகள் யானை கூட்டத்தை ஆச்சரியத்துடன் கண்டு சென்றனர். யானைகள் தொடர்ந்து சாலையில்உலா வரும் என்பதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
சந்தன மர கடத்தல் - 5 பேர் கைது
கோவை, ஜன.13- கோவை மாவட்டத்தில் சந்தன மர கடத்தல் என்பது தொடர் சம்பவமாய், போலீ சாருக்கு சவாலாய் மாறியுள்ள நிலையில், இது தொடர்பாக ஐந்து பேரை காவல்துறை யினர் கைது செய்துள்ளனர். கோவையில் ரேஸ்கோர்ஸ், அரசு ஊழி யர்கள் குடியிருப்பு உள்ளிட்ட இடங்களில் சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோவை நகரில் பல இடங்களில் சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்றனர். குறிப்பாக பாதுகாப்பு மிகுந்த ரேஸ்கோர்ஸில் உள்ள மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் என சந்தன மரம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் நான்கு தனிப்படைகள் அமைக்கப் பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் சந்தன மர கடத்தல் கும் பலை சேர்ந்த 5 பேர் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீ சார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது 5 பேர் கும்பலை பிடித்து விசா ரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததை அடுத்து அவர்களை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் 5 பேரும் சந்தன மர கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து போலீசார் சந்தன மர கடத்தல்காரர்கள் சத்தியமங்கலம் ரோட்டை சேர்ந்த செல்வகுமார் (37), திருப்பூர் நெசவ பாளையம் காலனியை சேர்ந்த செந்தில் குமார், பீகாரை சேர்ந்த மிஸ்பர் (29), ஈரோடு மாவட்டம் தாளவாடியை சேர்ந்த ஹீமாயூன் (70), சத்தியை சேர்ந்த முகமது அலி ஜின்னா (30) என்பது தெரிய வந்தது போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் 5 பேரும் கோவையில் எங்கெல் லாம் சந்தன மரத்தை வெட்டி கடத்தியுள் ளனர்? சந்தன மரம் கடத்தப்பட்டதற்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என பல் வேறு கோணங்களில் ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பசு மாடு மீட்பு
கோவை, ஜன, 13- கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ரங்க சமுத்திரம் சேர்ந்த குழந்தை வேலு என்பவர் பசு மாடுகளை வளர்த்தி வருகிறார். இந்நிலையில் காலையில் மேய்ச்சலுக்கு சென்ற மாடு ஒன்று தோட் டத்தில் உள்ள தண்ணீர் இல்லாத 40 அடி கிணற்றில் தவறி விழுந்தது. உடனடி யாக தீயணைப்பு துறையி னருக்கு தகவல் அளிக்கப் பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பத்துக்கும் மேற்பட்டோர் ராட்சச கிரேன் உதவியுடன் சுமார் 4 மணி நேரம் போராடி, கிணற்றில் விழுந்த மாட்டை உயிருடன் மீட்டனர்.
நீலகிரியில் பொங்கல் பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம்
உதகை, ஜன.13- தமிழர்களின் திருவிழாவான பொங்கல் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப் பட உள்ளது. இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாட தேவையான பொருட்களை பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கினார். இதன்படி கரும்பு, பானை, மஞ்சள் கொத்து, பூளைப்பூ, ஆவா ரம்பூ, பனங்கிழங்கு, அரிசி, வெல்லம், காய்கறிகள், பழங்கள் மற்றும் கலர் கோலப்பொடி உள்பட பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் அள்ளிச் சென்றனர். ஊட்டி மற்றும் குன்னூர் மார்க் கெட்டுகள், ஆகிய இடங்களில் பொங்கல் பொருட்கள் அமோக மாக விற்பனையானது. சத்தியமங்கலம், காரமடை மற்றும் கோவை பூ மார்க்கெட்டில் இருந்து பனி காரணமாக ஊட்டிக்கு பூக்கள் வரத்து குறைந்த அளவில் இருந்தது. இதன்படி, வெள்ளியன்று மல்லிகை கிலோ ரூ.6 ஆயிரத்திற் கும், முல்லை ரூ.3 ஆயிரத்திற்கும், ஜாதிப்பூ ரூ.2800, செவ்வந்தி ரூ. 230, கோழிக்கொண்டை ரூ.160, துளசி ரூ.80 என விலை சற்று அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. இதே போல் அரளி பூ ரூ.480, காக்கடா ரூ. 1000, பட்டன் ரோஜா ரூ.330க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் தரமான கரும்பு ஒரு ஜோடி ரூ.150 முதல் ரூ.200 வரையும், மஞ்சள் கொத்து ஜோடி ரூ.60 முதல் ரூ.80 வரையும் ஒரு கட்டு பொங்கல் பூ ரூ.20-க்கும் விற்பனை செய்யப் பட்டது. திருச்சி, தஞ்சாவூர் உள் ளிட்ட பகுதிகளில் இருந்து ஊட்டிக்கு கொண்டுவரப்பட்ட பொங்கல் பானைகள் தரம் வாரியாக ரூ.200 முதல் ரூ. 800 வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், உழவர் சந்தையில் வெள்ளியன்று காலை பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பழங்கள், காய்கறிகள், இளநீர், கரும்பு என அனைத்து பொருட்களும் அங்கு கிடைத்ததால் பொதுமக்கள் தேவை யான பொருட்களை வாங்கி சென் றனர். அங்கு ஒரு கிலோ எலுமிச்சை ரூ.60, கொய்யா ரூ.80, ஆப்பிள் ரூ. 120, மாதுளை ரூ.170, சாத்துக்குடி ரூ.80, கருப்பு பன்னீர் திராட்சை 80, காதலி, பூவன் ரூ.50, செவ்வாழை ரூ.70 கற்பூரவள்ளி ரூ.60க்கு விற் பனை செய்யப்பட்டது. இதேபோல் கமர்சியல் சாலை மற்றும் மார்க்கெட்டில் பகுதிகளில் இருந்த பூஜை பொருட்கள் விற் பனை கடையில் சாமி படங்கள் மற்றும் பூஜைப் பொருட்களை பொது மக்கள் விரும்பி வாங்கி சென்றனர். இதேபோல் மெயின் பஜார் மற்றும் கமர்சியல் வீதிகளில் ஜவுளிக் கடைகளிலும் பொதுமக்கள் புத்தா டைகள் எடுக்க ஆர்வம் காட்டினர். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி- சேலை விற் பனை அதிகளவில் இருந்தது.