districts

img

பாலிதீன் பை தவிர்க்க விழிப்புணர்வு பிரச்சாரம்

திருப்பூர், ஜூலை 4 - சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பாலிதீன் பைகளை  தவிர்ப்போம் என மாணவர்கள் சபதம் ஏற்றனர். சர்வதேச நெகிழிப் பை இல்லாத தினத்தை முன்னிட்டு  தமிழ்நாடு மாசுக் கட்டுபாடு வாரியம் மற்றும் திருப்பூர்  சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம்  அலகு-2 சார்பாக திருப்பூர் குமரன் நினைவு மண்டபத்தின் முன்பு நெகிழி அரக்கன் போல் வேடமிட்டும், மஞ்சப்பை வேட மிட்டும், காகித வேடமிட்டும் விழிப்புணர்வு நிகழ்வு நடை பெற்றது.  நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். மாசுபாடு வாரியம்  வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சரவணக்குமார்  மற்றும் வடக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் உதய குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும், தமிழ்நாடு மாசுக் கட்டுபாடு வாரியம் மாவட்ட சுற்றுச் சூழல் உதவி பொறியாளர்கள் சத்தியன், பாரதிராஜா, மன்னன்  திப்புசுல்தான், வடக்கு காவல் நிலைய உதவி காவல் ஆய்வா ளர் ஆனந்தன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். மாணவ செயலர்கள் சுந்தரம், விஜய், ராஜபிரபு, காமராஜ்,  மது கார்த்திக் ஆகியோர் தலைமையில் 30க்கும் மேற்பட்ட  நாட்டு நலப்பணித் திட்ட அலகு -2 மாணவ, மாணவிகள் கலந்து  கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை  ஏந்தியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும், மஞ்சப்பை களை வழங்கியும், நடனமாடியும்  வித்தியாசமான முறையில்  விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

;