திருப்பூர், மே 19 - ஆன்லைன் அபராதம் என்னும் பெயரில், மோட்டார் வாகன ஆய் வாளர்கள் ஆட்டோ ஓட்டுநர்களிடம் அநியாயமாக பணம் பறிப்பதைக் கண்டித்து சிஐடியு ஆட்டோ தொழி லாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வெள்ளி யன்று நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத் தலை வர் டி.வி.சுகுமார் தலைமை ஏற்றார். ஒன்றிய அரசு தனியார் மோட்டார் தொழிலை கடுமையாக பாதிக் கும் மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தை கைவிட வேண்டும். ஆன் லைன் அபராதம் என்று வழியோ ரம் நிறுத்தக்கூடிய ஆட்டோக் களுக்கு கூட ஆயிரக்கணக்கில் அப ராதத் தொகை வசூலிக்கப்படு கிறது. ஏற்கனவே, எரிபொருள் விலை உயர்வு, ஒன்றிய அரசின் சட்ட ரீதி யான தாக்குதல் ஆகியவற்றை சந்திக்கும் ஆட்டோ தொழிலாளர் கள் அன்றாடம் சம்பாதிக்கும் தொகையையும் அபராதத்திற்காக இழக்கும் நிலை உள்ளது. எனவே தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசின் சட்டத்தின் அடிப் படையில் அபராதம் விதிக்கும் முறையை கைவிட வேண்டும். ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வா தாரத்தை பாதுகாக்கும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர். இதில், சிஐடியு திருப்பூர் மாவட்ட தலைவர் சி.மூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் பி. பாலன், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.சிவ ராமன் உள்ளிட்டோர் கோரிக்கை களை வலியுறுத்தி உரையாற்றினர். இதில் சங்க நிர்வாகிகள் ஆர்.ஜெயக்குமார், ஐ.லாரன்ஸ், சி. பெருமாள், ராமலிங்கம், முருகேஷ் உள்பட ஆட்டோ தொழிலாளர்கள் திரளாக பங்கேற்றனர்.