districts

img

விஷச்சாராய விற்பனையை ஒழித்திடுக: வாலிபர், மாதர் சங்கத்தினர் ஆவேசம்

நாமக்கல், ஜூன் 21- விஷச்சாராய விற்பனையை ஒழித்திட வலியுறுத்தி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம், அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் அருந்தி சுமார் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டனர். இதில், தற்போது வரை  50க்கும் மேற்பட்டோர் உயிரிழந் துள்ளனர். தமிழகத்தையே இச்சம் பவம் உலுக்கி உள்ளது. விஷச்சா ராய விற்பனையை முழுமையாக ஒழித்திட வலியுறுத்தி மாநிலம் முழு வதும் வாலிபர், மாதர் சங்கத்தினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்ஒருபகுதியாக, விஷச்சா ராய உயிரிழப்பு ஏற்படுவதற்கு கார ணமானவர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும். உயிரி ழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க  வேண்டும். நகரங்கள் முதல் கிரா மங்கள் வரை புழக்கத்தில் உள்ள  கஞ்சா, குட்கா, போதை மாத்திரை கள், சந்துக்கடை விற்பனை உள் ளிட்ட போதைப்பொருட்களின் புழக் கத்தை ஒழிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, வாலிபர் சங்க மாவட் டப் பொருளாளர் எஸ்.கே.சிவச் சந்திரன் தலைமை வகித்தார். இந் திய மாணவர் சங்க முன்னாள் மாநி லத் தலைவர் ஏ.டி.கண்ணன், வாலி பர் சங்க மாவட்டத் தலைவர் லட் சுமணன், மாவட்டச் செயலாளர் மணிகண்டன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் வாலிபர்  சங்க மாவட்ட துணைத்தலைவர் பிரபு, மாவட்ட துணைச்செயலா ளர் ஆர்.ராஜ்தேவ் மற்றும் மாவட் டக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் கோட்டை மைதானத் தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட் டத்திற்கு, வாலிபர் சங்க மாவட்டத்  தலைவர் வி.ஜெகநாதன் தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாவட் டச் செயலாளர் வி.பெரியசாமி, மாவட்டப் பொருளாளர் எம்.வெற்றி வேல், ஒன்றியச் செயலாளர் கண் ணன், வடக்கு மாநகரச் செயலாளர் குருபிரசன்னா, கிழக்கு மாநகரச் செயலாளர் விமல்குமார், மேற்கு  மாநகரச் செயலாளர் பகத்சிங், மாவட்டப் பொருளாளர் எம்.வெற்றி வேல் உட்பட பலர் கலந்து கொண் டனர். முடிவில், தாலுகாச் செயலா ளர் விஜயேந்தர் நன்றி கூறினார். இதேபோன்று மாதர் சங்கம்  சார்பில், பெத்தநாயக்கன்பாளை யம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, சங்கத்தின் ஒன்றி யத் தலைவர் ம.துளசி தலைமை  வகித்தார். இதில் மாதர் சங்க மாவட் டப் பொருளாளர் க.பெருமா, மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டச் செய லாளர் க.காளிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். தருமபுரி தருமபுரி பிஎஸ்என்எல் அலுவ லம் முன்பு அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கத்தின் சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத் தின் மாவட்டத் தலைவர் ஏ.ஜெயா தலைமை வகித்தார். இதில் மாவட் டச் செயலாளர் ஆர்.மல்லிகா, முன் னாள் மாவட்டச் செயலாளர் எஸ். கிரைஸாமேரி, மாவட்ட நிர்வாகி கள் கே.பூபதி, கே.சுசிலா, பி.கிருஷ் ணவேணி, தனலட்சுமி, ஒன்றியத் தலைவர் ஆர்.தமிழ்மணி, ஒன்றியச் செயலாளர் எம்.மீனாட்சி, ரங்கநா யகி, வள்ளி உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங் கத்தின் மாவட்டத் தலைவர் விவே கானந்தன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அர்ஜூன், பொருளாளர் தினேஷ் ராஜா மற் றும் நிர்வாகிகள் ராஜா, நிஸார் அஹ மது, சக்திவேல் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.  ஈரோடு ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி நால்ரோட்டில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க  மாவட்டக்குழு உறுப்பினர் கோபால கண்ணன் தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் வி.ஏ. விஸ்வநாதன், பொருளாளர் லோக நாதன், மாணவர் சங்க மாவட்டத்  தலைவர் நவின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.