districts

img

ரூ.3 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனம்

கோவை, செப்.5– கோவை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக் கப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான மாற்றுத்திறனாளிகளுக்கான  இருசக்கர வாகனங்கள் ஒப்படைக் கும் நிகழ்வு நடைபெற்றது. இதில்  பி.ஆர்.நடராஜன் எம்.பி., பங் கேற்று பயனாளிகளுக்கு வழங்கி னார். மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து  பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக் கான நிதிகளை ஒதுக்கி அத்திட்டத் திற்கான செயல்வடிவம் கொடுத்து  வருகிறார். இதன்ஒருபகுதியாக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நான்கு மாற்று திறனாளிகள் இரு சக்கர வாகனத்திற்கான வேண்டு கோளை முன்வைத்திருந்தனர். இத னையேற்று மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட 4 இருசக்கர வாக னத்திற்கான ரூ.3 லட்சத்து 15 ஆயி ரத்து 400 நிதியினை ஒதுக்கீடு செய்தி ருந்தார். ஒரு வாகனத்தின் மதிப்பு ரூ.78 ஆயிரத்து 850 ஆகும். இதனை யடுத்து இருசக்கர வாகனங்கள் தயா ரான நிலையில், அதனை ஒப்படைக் கும் நிகழ்வு திங்களன்று நடைபெற் றது. காந்திபுரத்தில் உள்ள நாடாளு மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பி.ஆர்.நடரா ஜன் எம்.பி., பங்கேற்று பயனாளிக ளுக்கு இந்த இருசக்கர வாக னங்களை வழங்கினார்.  இதனை ஆவாரம்பாளையத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சத்திய பாலன், சித்தாப்புதூரை சேர்ந்த சிவக் குமார், சுல்தான்பேட்டை ஒன்றி யத்தை சேர்ந்த சரவணக்குமார், சர வணம்பட்டியை சேர்ந்த பாலமுரு கன் ஆகிய பயணாளிகள் இந்த பிரத் தியேகமாக வடிவமைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை பெற்றுக் கொண்டு  மார்க்சிஸ்ட் கட்சியின் பி. ஆர்.நடராஜன் எம்.பி.,க்கு நன்றி தெரி வித்தனர்.  இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளி கள் துறையின் மாவட்ட அலுவலர் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினகள் கே.மனோ கரன், யு.கே.சிவஞானம் மற்றும் மார்க் சிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பி னர்கள் வி.இராமமூர்த்தி, கண்ணகி ஜோதிபாசு உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

;