சேலம், நவ.26- பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறும் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு முப்பெரும் விழா நடை பெற்றது. சர்வதேச உரிமை கழகம் மற்றும் விஸ்டம் லாசேம்பர் சார்பில் ஏற்காட்டில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சேலம் சரக டிஐ ஜியும், மாமனிதர் கக்கனின் பேத்தியுமான ராஜேஸ்வரி பங்கேற்றார். சர்வதேச உரிமை கழகத்தின் சார்பில் அமைப்பின் நிறுவனர் மோசஸ் செல்லதுரைக்கு அமெரிக்கதமிழர் அமைப்பு சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பாரா ஒலிம்பிக் போட்டியில் திறமை இருந்தும் பணம் இல்லாததால் போட்டியில் பங்கேற்காத 10 மாற்றுத்தி றனாளி விளையாட்டு வீரர்களுக்கு 16 லட்சத்து 50 ஆயி ரம் ரூபாய் தொகையை அமைப்பின் சார்பில் சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி வழங்கினார். மேலும், ஏற்காடு மலைவாழ் மக்களை பாதுகாக்கும் வகையிலும், ஏற்காடு மலைப்பகுதி அமைந்துள்ள சேர்வ ராயன் மலையை பாதுகாக்கும் வகையிலும் மலைவாழ் மக்க ளுக்கு தொடர்ந்து இலவச சட்ட தகவல்களை அளிப்பது என வும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.