districts

img

மழையில் இடிந்த 111 வீடுகள்: சுவரில்லாத வீடுகளில் மலைவாழ் மக்கள்

உடுமலை, ஜன.10- உடுமலை பகுதிகளில் பெய்த பலத்த மழையால், மலை வாழ் மக் கள் குடியிருப்புகளில் 111க்கும் மேற் பட்ட வீடுகள் இடிந்துள்ளது. மலை வாழ் மக்களின் இந்த அவல நிலை யைப் போக்க அரசு விரைந்து நடவ டிக்கை எடுக்க வேண்டும். உடுமலை மலைவாழ் மக்கள் குடி யிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்க ளாக பெய்த கனமழையில் மண் சுவர் கள் இடித்து உள்ளன. இதனால், தக ரச் சீட்டுகளை வைத்து மறைத்து குடி யிருந்து வருகிறார்கள். தளி பேரூராட் சிக்கு உட்பட்ட திருமூர்த்திமலையில்  23 வீடுகளும், குருமலை 39, மேல்குரு மலை 16, பூச்சிக்கொட்டாம்பாறை மலை குடியிருப்புகளும் வீடுகள் இடிந்துள்ளது. மேலும், மாவடப்பு 15,  குழிப்பட்டி 9, ஈசல்திட்டு பகுதியில்  9, கோடந்தூர் பகுதிகளிலும் இடிந் துள்ளது. பல குடியிருப்புகளில் இடித்த வீடுகளின் எண்ணிக்கை தெரி யவில்லை. இது குறித்து மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகிகள் கூறும் போது, கன  மழைக்கு தாங்காத மண் சுவர்கள் இடிந்து விட்டது. காங்ரீட் வீடுகள்  கட்டித்தர வேண்டும் என்று பலமுறை  கோரிக்கை வைத்துள்ளோம். இது வரை எங்களின் துயரத்தை கேட்க யாரும் வரவில்லை. மழைக்கு வீடு கள் இடிவது தொடர் கதையாக உள் ளது. மாவட்ட நிர்வாகம் ஏற்பட்ட இழப்பிற்குத் தீர்வு காணும் வகை யில் புதிய வீடுகள் கட்டும் வரை தற்கா லிகமாக தங்க ஏற்பாடு செய்ய வேண் டும் என்று கோரிக்கை வைத்தார் கள். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கிருபயா விடம் கேட்ட போது, மலைவாழ் மக் கள் குடியிருப்பு பகுதியில் வீடுகள் இடிந்து உள்ளது குறித்தும், அவர் களின் தேவைகளைப் பூர்த்தி செய் வது குறித்தும் உடுமலை வட்டாட்சிய ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள் ளது. கூடிய விரைவில் அவர் ஆய்வு  செய்து நடவடிக்கை எடுப்பார் என் றார். இதுதொடர்பாக தளி பேரூ ராட்சி செயல் அலுவலர் கல்பனா விடம் கேட்ட போது மலைவாழ் குடி யிருப்பு பகுதியில் வீடுகள் சேதம் குறித்து தகவல் கிடைத்து உள்ளது. மக்கள் நலனைப் பாதுகாக்க உரிய  நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.