districts

img

வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெறு இரண்டாம் நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

ஈரோடு, டிச.15- மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு இயற்றியுள்ள வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி செவ்வா யன்று இரண்டாவது நாளாக தமி ழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவ சாயிகள் காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர்.  ஈரோடு மாவட்டம், பெருந்துறை ரோடு மேம்பாலம் அருகில் நடை பெற்ற காத்திருப்பு போராட்டத் திற்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு வின் செயற்குழு உறுப்பினர் ஏ.எம். முனுசாமி தலைமை வகித்தார்.

கி.வே. பொன்னையன், சுப்பு (எ) முத்துசாமி, சி.எம். துளசிமணி, அரச் சலூர் செல்வம், பொன்னுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.எம்.பழனி சாமி,  அகில இந்திய விவசாயகிள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு தமிழக ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.மாரிமுத்து, நீரோடை அமைப் பின் தலைவர் நிலவன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலை வர் சித்திக், சிஐடியு மாவட்ட பொரு ளாளர் கே.மாரப்பன், காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் சிபிஐ மாநில குழு உறுப் பினர் வி.பி.குணசேகரன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார்.  

மேலும், இந்த காத்திருக்கும் போராட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் (தெற்கு) சு.முத்துசாமி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், சிபிஎம்  மாவட்ட செயலாளர் ஆர்.ரகு ராமன், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் பி.பி.பழனிச்சாமி, சி.பரம சிவம், ஆர்.கோமதி, ஆர்.விஜய ராகவன், சுப்ரமணியன் மற்றும் சிஐ டியு மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், ஈரோடு நகரச் செயலாளர் சுந்தர ராஜன் உள்ளிட்ட 500க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.

கோவை

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கால்களை நீட்டி, கைகளை தட்டி, கோரிக்கை முழக்கங்களை எழுப்பியபடி நூதன முறையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தில் தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் மாவட்ட தலை வர் வி.பி.இளங்கோவன், செய லாளர் வி.ஆர்.பழனிச்சாமி, தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிச்சாமி, விவசாய தொழிலா ளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் துரைசாமி, செயலாளர் செல்வ ராஜ், மக்கள் அதிகாரம் மூர்த்தி மற்றும் எஸ்.கருப்பையா, ரவிச் சந்திரன், பஞ்சலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட னர். இதைத்தொடர்ந்து போராட் டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு திமுக வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கெம்கோ ரத்தின சாமி தலைமை வகித்தார். தமிழ் நாடு விசைத்தறி தொழிலாளர் சம் மேளன  (சிஐடியு) மாநில தலைவர் பி.முத்துச்சாமி, கொமதேக விவ சாய அணி வடக்கு மாவட்ட செயலா ளர் லோகநாதன், தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்ட துணைத்தலை வர் ஏ.பாலதண்டபாணி,  அகில இந் திய விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.ஆர். மது சூதனன் ஆகியோர் உரையாற்றி னார்.

மேலும், தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார், கொமதேக ஒருங்கி ணைந்த விவசாய அணி மாவட்ட செயலாளர் கே.தேவராஜ், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கே.சின்னச்சாமி, கிழக்கு மாவட்ட செயலாளர் ராசு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சி.சுப்பிர மணியம், மாவட்ட செயலாளர் ஏ.பஞ்சலிங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க  நிர்வாகி சாவித்திரி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் பங்கேற்ற அனை வரையும் போலீசார் கைது செய்த னர்.

சேலம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு காத்திருப்பு போராட் டம் மேற்கொள்ள காவல்துறை யினர் அனுமதி மறுத்ததால் ஆவேச மடைந்த விவசாயிகள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். இப்போராட் டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க  (சிபிஐ) மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை வகித் தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சிபிஎம்) மாவட்ட செயலாளர் ஏ.ராமமூர்த்தி போராட்டத்தை துவக்கி வைத்தார்.

இதில், சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் பரம சிவம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர்கள் பி.தங்கவேலு, பி.அரியாக்கவுண் டர், துணைச் செயலாளர்கள் ஜி. மணிமுத்து, எம்.ராமசாமி, பொரு ளாளர் ஏ.அன்பழகன், அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்க  மாவட்ட பொருளாளர் என்.ஜெயலட்சுமி, எஸ்யூசிஐ (கம்யூனிஸ்ட்) மாவட்ட  பொறுப்பாளர் மோகன், நடராஜன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். இதை யடுத்து மறியலில் ஈடுபட்ட அனை வரையும் போலீசார் கைது செய்த னர்.

நாமக்கல்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நாமக்கல் கொசவம்பட்டி பிரதான சாலையில் சாலை மறி யல் போராட்டம் நடைபெற்றது. இப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.பெரு மாள் தலைமை வகித்தார். இதில், மாவட்ட துணை செயலாளர் வீ.சதா சிவம் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

தருமபுரி  

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவ லகம் முன்பு அகில இந்திய  விவசா யிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் மாவட்ட அமைப்பாளர் சோ.அருச்சுணன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது. இப்போராட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் பால கிருஷ்ணன், திமுக மாவட்ட செய லாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்.எல்.ஏ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார்,  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, டி.எஸ்.ராமச்சந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்ட தலை வர் கே.என்.மல்லையன், மதிமுக மாவட்ட செயலாளர் அ.தங்கராஜ், அகில இந்திய விவசாயிகள் மஞ்ச் இயக்கத்தின் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், சிபிஐ விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சின்ன சாமி,  விவசாய தொழிலாளர் சங்கத் தின் மாவட்ட செயலாளர் பிரதா பன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

;