திங்கள், ஜனவரி 18, 2021

districts

img

ஆன்லைன் மூலம் அரையாண்டு தேர்வு? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

கோபி, நவ.28- அரையாண்டு தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் என்ற தகவல் தவறானது என  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபா ளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காசிபா ளையம், குருமந்தூர்கோசணம், அஞ்சானூர்,  ஆண்டிபாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில் தனிநபர் குடிநீர் திட்டப்பணி, மகளிர் சுய  உதவிக்குழுகள் கடனுதவி என ரூ.6.19  கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்ப ணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத் தார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர் களை சந்தித்த அவர் கூறுகையில், அரை யாண்டு தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெ றும் என்ற தகவல் முற்றிலும் தவறானது. பள்ளிகளில் பாடத்திட்டம் குறைப்பு குறித்து திங்களன்று முதல்வரிடம் அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளது. அதனடிப்படையில், 5 நாட்களில் பாடத்திட்டங்கள் குறைத்து வழங்கப்படும். ஜாக்டோ ஜியோ நிர்வா கிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப  பெறுவது குறித்து இதுவரை முதல்வரிடம் ஆலோசனை நடத்தவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

;