districts

img

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

அரியலூர், ஜூன் 19 - அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிபெற வைத்த  தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

உடையார்பாளையம் பேரூராட்சித் தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார், துணைத் தலைவர் அக்பர் அலி ஆகியோர் பள்ளி தலைமை ஆசிரியர் முல்லைக்கொடி மற்றும் ஆசிரியர்களை பாராட்டி,  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய 100 சதவீத தேர்ச்சி சான்றிதழ்களை வழங்கினர்.மேலும் 10 ஆம் வகுப்பு தேர்வில் கணிதப் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்த மாணவி பவித்ரா, ஆசிரியர் தமிழரசி ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.ஆசிரியர் மணிவண்ணன் நன்றி கூறினார்.