court

img

5 கோடி வாக்காளர்களை நீக்கினால் நீதிமன்றம் அமைதியாக இருக்காது – உச்சநீதிமன்ற எச்சரிக்கை

பீகார் மாநிலத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (Special Intensive Revision – SIR) தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பீகார் மாநிலத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தம் பணியின் பெயரில் பெருமளவு வாக்காளர்களின் பெயர்கள் சட்டவிரோதமாக நீக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளன.
இது தொடர்பான வழக்கு விசாரணையில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெருமளவு மக்களின் பெயர்கள் நீக்கப்படுவதாக வந்துள்ள குற்றச்சாட்டுகளைப் பரிசீலித்த நீதிபதிகள், “சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் 5 கோடி வாக்காளர்களை நீக்க முயன்றால், நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது” என்று தெளிவாக தெரிவித்தனர்.
மேலும், “தேர்தல் ஆணையத்தின் நடைமுறையில் சட்டவிரோத செயல்முறைகள் இருப்பது உறுதியானால், அந்த நடைமுறை முழுவதையும் ரத்து செய்வதில் தயக்கம் இருக்காது” என்றும் குறிப்பிட்டனர்.
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்படுவது மக்களின் அடிப்படை வாக்குரிமையை நேரடியாக பாதிக்கும் காரியம் என்பதால், இத்தகைய நடவடிக்கைகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன என்பதை விரிவாக விளக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது