court

img

உமர் காலித்துக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு!

2020 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக நடைபெற்ற போராட்டங்களுடன் தொடர்புடைய வழக்கில் கைது செய்யப்பட்ட உமர் காலித்துக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்த ஏழு பேரில், உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகிய இருவருக்கு மட்டும் ஜாமீன் மறுக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது. 
மேலும், தற்போதைய உத்தரவிலிருந்து ஓராண்டுக்குப் பிறகு அல்லது சாட்சிகளின் விசாரணை முடிந்த பின்னர், உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் மீண்டும் ஜாமீன் கோரி விண்ணப்பிக்கலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.