திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் விசாரணை முடிவடைந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு நாளை தீர்ப்பை வழங்கவுள்ளது.
தர்கா அருகே உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி, தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக காவல்துறை மற்றும் மாநில அரசு சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மேல்முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் ஜெயசந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 18ஆம் தேதி வழக்கு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
