tamilnadu

img

தொடரும் ரத்த வெறி, எண்ணெய்த் திருட்டு! கியூபா, கொலம்பியா, மெக்சிகோ, கிரீன்லாந்தை குறிவைக்கும் டிரம்ப்

தொடரும் ரத்த வெறி, எண்ணெய்த் திருட்டு! கியூபா, கொலம்பியா, மெக்சிகோ, கிரீன்லாந்தை குறிவைக்கும் டிரம்ப்

நியூயார்க்,டிச.6- வெனிசுலா மீது பயங்கரவாத தாக்குதல் நடத்திய டிரம்ப் அந்நாட்டை ஆக்கிரமித்து எண்ணெய் வளங்களை அமெரிக்க நிறுவனங்களே கையாளும் என தெரிவித்துள் ளார். அதனைத்தொடர்ந்து கியூபா, கொலம்பியா, மெக்சி கோ, கிரீன்லாந்து ஆகிய நாடுகளையும் ஆக்கிரமிக்கப் போவதாக மிரட்டல் விடுத்து வருகிறார். இந்த நடவடிக்கை க்கு அந்நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.  வெனிசுலாவின் துணை ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ்  நியமிக்கப்பட்டிருந்தாலும் வெனிசுலா மீதான அதிகாரம் அமெரிக்காவிடமே உள்ளது. வெனிசுலா முறை யாக நடந்துகொள்ளவில்லை என்றால், அமெரிக்க ராணு வத்தின் தரைப்படையை அனுப்பி தாக்குதல் தொடுப்போம் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.  கியூபர்கள் கொலை மேலும் வெனிசுலா மீதான தாக்குதலில் பல கியூபர்கள் கொல்லப்பட்டதாக டிரம்ப் கூறினார். அதனுடன்  கியூபா வும் வீழ்ச்சியடையத் தயாராக இருக்கிறது என கூறியுள்ளார். அதாவது அமெரிக்காவின் பல ஆண்டுகால தடைக ளின் காரணமாக கியூபாவிற்கு இப்போது எந்த வருமான மும் இல்லை. அவர்கள் தங்கள் வருமானம் முழுவதை யும் வெனிசுலாவிடமிருந்து, வெனிசுலா எண்ணெய்யிலி ருந்து பெற்றனர். இப்போது அவர்களுக்கு அது எதுவும் கிடைப்பதில்லை. கியூபா வீழ்ச்சியடையத் தயாராக உள்ளது என கூறியுள்ளார்.  அமெரிக்கா நடத்திய தாக்குதலில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 32 ராணுவ அதிகாரிகள் படுகொலை செய் யப்பட்டுள்ளதாக கியூபா அரசு அறிவித்துள்ளது. இதற்காக இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிப்பையும் கியூபா அறி வித்துள்ளது. மெக்சிகோவிற்கும் ராணுவம் அனுப்பப்படும் கியூபாவை போலவே மெக்சிகோவிற்கும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.  அந்த நாடு தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும், ஏனென்றால் போதைப்பொருட்கள் மெக்சிகோ வழியாக வெள்ளம்போல் வருகின்றன. அதனை சரி செய்யவில்லை என்றால் உங்கள் நாட்டிலும் ஏதாவது செய்ய வேண்டியிருக்கும் என்று  மிரட்டியுள்ளார். அடிபணிய முடியாது பாதுகாப்பு மற்றும் பிற விஷயங்களில் அமெரிக்காவு டன் எங்களுக்கு ஒரு சிறந்த உறவு உள்ளது. பாதுகாப்பு விஷ யங்களில் தகவல் தொடர்பு மற்றும் புரிதல் இருக்கிறது. நாங்கள் எப்போதும் சொல்வது போல அமெரிக்காவுடன்  ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு இருக்கும். ஆனால் அந்நா ட்டுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம் என அமெரிக்கா வின் ராணுவ ஆக்கிரமிப்பு மிரட்டலுக்கு மெக்சிகோ ஜனா திபதி கிளாடியா ஷெயின்பாம் பதிலடி கொடுத்துள்ளார்.  கொலம்பியா ஜனாதிபதி மீது  ஆதாரமற்ற குற்றச்சாட்டு கொலம்பிய ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோ, வெனி சுலா மீதான தாக்குதல் நடவடிக்கையானது லத்தீன் அமெ ரிக்காவின் இறையாண்மை மீதான ஒரு தாக்குதல். இது மோசமான மனிதாபிமான நெருக்கடியைத் தூண்டக்கூடும்  என கடுமையாக விமர்சித்தார். மேலும் வெனிசுலா மற்றும் லத்தீன் அமெரிக்காவின் இறையாண்மைக்கு எதிரான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு குறித்து ஐ.நா பாதுகாப்பு அவை கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  இந்த விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளாத டிரம்ப், கொலம் பியா ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோ கொக்கைன் தயா ரிக்கிறார். அதை அமெரிக்காவிற்கு அனுப்புகிறார் என  மதுரோ மீது வைத்தது போன்றே ஆதாரமற்ற குற்றச்சாட்டு களை வைத்துள்ளார். மேலும் பெட்ரோ, ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள் என மிரட்டல் விடுத்துள்ளார்.  இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பெட்ரோ, “தவ றான குற்றச்சாட்டுகளைக் கூறி என்னைப் பழிவாங்குவதை நிறுத்துங்கள்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.  கிரீன்லாந்தையும் ஆக்கிரமிப்பேன் தி அட்லாண்டிக் இதழுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறியதாவது, அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லா ந்து கண்டிப்பாகத் தேவை. வெனிசுலா தாக்குதல் குறித்து மற்ற நாடுகள் என்ன நினைத்தாலும் சரி, கிரீன்லாந்து மீதான எங்கள் (ஆக்கிரமிக்கும்) நிலைப்பாட்டில் மாற்றமில்லை என மிரட்டும் வகையில் பேசியுள்ளார்.  ஆர்க்டிக் பகுதியில் அமைந்துள்ள கிரீன்லாந்து, டென்மார்க் நாட்டின் ஒரு சுயாட்சிப் பகுதியாகும். அங்குள்ள இயற்கை வளங்கள், கனிமங்கள் மற்றும் ஆர்க்டிக் கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற புவிசார் அரசியல்  நோக்கத்தில் அப்பகுதியை ஆக்கிரமிக்க  அமெ ரிக்கா திட்டமிட்டு வருகிறது.  டிரம்பின் இந்தப் பேச்சுக்கு டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், அமெரிக்காவிற்கு கிரீன் லாந்தை இணைத்துக் கொள்ள எந்த உரிமையும் இல்லை. நெருங்கிய நட்பு நாடான டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து மக்கள் மீது மிரட்டல் விடுப்பதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும்.”  டென்மார்க், கிரீன்லாந்து, பரோயே தீவுகள்  ஆகியவை என எமது நாட்டின் எந்தப் பகுதியையும் அமெரிக்கா கைப்பற்ற முடியாது என்று அவர் நேரடியாகவும்  மிகக் கடுமையாகவும் டிரம்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.