அமித் ஷாவா? அவதூறு ஷாவா? திண்டுக்கல் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சரமாரி கேள்வி!
திண்டுக்கல், ஜன. 7 - அமித் ஷாவா? அவதூறு ஷாவா? என திண்டுக்கல் விழாவில் முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் சரமாரி கேள்வி எழுப்பினார். “தமிழ்நாட்டில் கலவரம் செய்ய வும், குழப்பம் ஏற்படுத்தவும் நினைக்கக்கூடிய சிலரின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது; இந்த ஸ்டாலின் இருக்கும் வரை அது நடக்கவே நடக்காது” எனவும் முழக்கமிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் ஜனவரி 7 புதனன்று நடைபெற்ற அரசு விழாவில் 1,595 கோடி ரூபாய் மதிப்பிலான 111 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, 212 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் உரையாற்றினார். அமித் ஷாவுக்குக் கண்டனம் அண்மையில் தமிழகம் வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சிற்குப் பதிலடி கொடுத்த முதலமைச்சர், “மக்கள் நலத்திட்டங்களைக் குறை சொல்ல முடியாதவர்கள், இல்லாத பிரச்சனைகளை உருவாக்கி குளிர் காய நினைக்கிறார்கள். அமித் ஷா இங்கே வந்து உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பேசிச் சென்றுள்ளார். அவர் அமித் ஷாவா அல்லது அவதூறு ஷாவா எனச் சந்தேகம் வருகிறது. தமிழகத்தில் இந்து சமய நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதாக அவர் கூறுவது அவரது பதவிக்கு அழகல்ல; அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்றார். ஆன்மீகப் பெரியோர்களும் போற்றும் திமுக ஆட்சி! பாஜக ஆளும் மாநிலங்களில் கூட செய்யாத சாதனைகளைத் திமுக ஆட்சி செய்துள்ளது எனக் குறிப்பிட்ட அவர், “எங்கள் அரசு பொறுப்பேற்றது முதல் சுமார் 4,000 திருக்கோவில்களுக்குக் குட முழுக்கு நடத்தப்பட்டுள்ளது. 995 கோவில்களுக்குச் சொந்தமான 7,701 கோடி ரூபாய் மதிப்பிலான 7,655 ஏக்கர் நிலங்களை மீட்டுள் ளோம். உண்மையான பக்தர்கள் மனதாரப் பாராட்டக்கூடிய ஆட்சி யாகவும், ஆன்மீகப் பெரியோர்கள் விரும்பும் ஆட்சியாகவும் இது திகழ்கிறது. அனைத்துச் சமய மத உரிமைகளையும் காப்பதே திராவிட மாடல்” என விளக்கினார். எடப்பாடி பழனிசாமி பதில் கூறத் தயாரா? கடந்த அதிமுக ஆட்சியில் 68 கோடி ரூபாய் மதிப்பிலான 55,000 லேப்டாப்புகளை வழங்கா மல் வீணடித்ததை சி.ஏ.ஜி. (CAG) அறிக்கை அம்பலப்படுத்தி யுள்ளதைச் சுட்டிக்காட்டிய முத லமைச்சர், “இதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் சொல்ல வேண்டும். 2023 ஏப்ரலில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை யைப் பார்த்தால் உண்மை புரியும்” என்றார். தமிழக மக்களின் சுயமரியாதைக்கு சவால் தேர்தல் அரசியல் குறித்துப் பேசிய அவர், “தமிழகத்தை யார் ஆள வேண்டும்? மோடியா அல்லது தமிழக மக்களா? என அமித் ஷா கேட்டுள்ளார். எங்களது வேலையை அவரே எளிதாக்கி விட்டார். இது தமிழர்களின் சுயமரியாதைக்கான சவால். அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால் அது பாஜக ஆட்சி க்கு வழிவகுக்கும் என்பதற்கு அமித் ஷாவே ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார். நீட் திணிப்பு, கல்வி நிதி முடக்கம், தொகுதி மறுவரை யறை எனத் தமிழகத்தின் ஜனநாயக வலிமையைக் குறைக்க நினைக்கும் பாஜக-வின் ‘ப்ராக்ஸி’ (Proxy) ஆட்சியை நடத்தவே எடப்பாடி பழனிசாமி துடிக்கிறார்” எனக் குற்றம் சாட்டினார். மீண்டும் வெற்றி உறுதி “கடந்த 11 ஆண்டுகளாகத் தமிழ கத்திற்கு ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடாதவர்களை மக்கள் நம்பத் தயாராக இல்லை. 2019, 2021, 2024 தேர்தல்களைப் போலவே வரும் தேர்தலிலும் ஓர வஞ்சனை செய்யும் பாஜக-விற்குப் மக்கள் பாடம் புகட்டுவார்கள். மக்கள் எப்போதும் நம் அரசு பக்கம்தான் இருக்கிறார்கள். மீண்டும் நாங்களே ஆட்சிக்கு வருவோம். இரண்டாம் முறை ஆட்சியில் தமிழகத்தை எல்லாத் துறைகளிலும் நம்பர் ஒன் இடத்திற்குக் கொண்டு செல்வோம்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமது உரையை நிறைவு செய்தார்.
