tamilnadu

img

கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்த வேண்டும்!

கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்த வேண்டும்!

பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் சென்னை, ஜன. 8 - பால் கொள்முதல் விலை மற்றும் ஊக்கத் தொகையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம்  சார்பில், தமிழகம் முழுவதும் வியா ழனன்று 60 மையங்களில் கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிலுவையில் உள்ள ஊக்கத் தொகை மற்றும் பால் பாக்கிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விவசாயிகளுக்கு போனஸ் வழங்க வேண்டும்; கால்நடைகளுக்கு 50 சத விகித மானிய விலையில் தரமான தீவ னம் வழங்க வேண்டும்; ஆரம்ப சங்கப்  பணியாளர்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய சிறப்பு ஊதியம் மற்றும் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும்; அரசுப் பள்ளி குழந்தைகளின் சத்துணவுத் திட்டத்தில் பாலையும் சேர்த்து வழங்க  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளையும் முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் சாமி. நடரா ஜன், பார்ல உற்பத்தியாளர் சங்க  மாநிலத் துணைத்தலைவர் எம்.  சிவாஜி திருப்பத்தூரிலும், பால் உற்பத் தியாளர் சங்க மாநிலத் தலைவர் வெண்மணி சந்திரன் மதுரையிலும், மாநிலப் பொதுச்செயலாளர் பெருமாள்,  மாநிலத் துணைத்தலைவர் எம்.  அண்ணாமலை ஆகியோர் கிருஷ்ண கிரி ஊத்தங்கரையிலும், மாநிலப் பொருளாளர் ரவி, மாநில உதவிச் செய லாளர் சி. ராதாகிருஷ்ணன் ஆகியோர்  ராணிப்பேட்டையிலும், மாநிலத் துணைத்தலைவர் கே. முகமது அலி  பெரம்பலூரிலும் கலந்து கொண்டனர். மாநிலத் துணைத் தலைவர்கள் ஏ.எம். முனுசாமி திருப்பூரிலும், என்.  செல்லதுரை அரியலூரிலும், பி. ராம நாதன் திருச்சியிலும், ஜி. ராமசுப்பு  தூத்துக்குடியிலும், என். ஜோதி நாமக் கல்லிலும், எஸ். கமலக்கண்ணன் பழனி யிலும், ஆர். ராஜேந்திரன் சேலத்திலும்  பங்கேற்றனர்.