கேரளத்தில் சர்வதேச புத்தகக் கண்காட்சி முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்தார்
கேரள சட்டமன்ற 4 ஆவது சர்வதேச புத்தகத் திருவிழாவை, சட்டமன்ற கட்டடத்தில் உள்ள சங்கரநாராயணன் தம்பி அரங்கில் புதன்கிழமையன்று நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் துவக்கிவைத்தார். ஜனவரி 7 முதல் 13 வரை நடைபெறும் இப்புத்தக திருவிழாவின்போது பொதுமக்கள் அனைவரும் கேரள சட்டமன்ற வளாகத்தை பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
