court

img

திருப்பரங்குன்றம் வழக்கில் தீர்ப்பு!

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில் தர்கா அருகேயுள்ள தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் நீதிபதி ஜீ.ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தர்கா அருகேயுள்ள தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது. 
மேலும் கோவில் நிர்வாகம் மட்டுமே தீபம் ஏற்றவேண்டும் எனவும் விளக்கு ஏற்றும்போது பொதுமக்களை அனுமதிக்கக்கூடாது எனவும்  நீதிபதிகள் ஜெயசந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.