சென்னையில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை போரூர் அருகே 6 வயது சிறுமி தனது அண்டை வீட்டாரான தஷ்வந்த் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்த செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் தஷ்வந்த் போக்சோ வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்பு ஜாமீனில் வெளியே வந்த அவர் தனது தாயையும் கொடூரமாக கொலை செய்தார். பின்னர் தந்தை பிறழ் சாட்சியாக மாறியதால் இந்த வழக்கிலும் விடுதலையானார்.
அதன்பின் மாவட்ட நீதிமன்றத்தால் வன்கொடுமை கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தஷ்வந்த் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் போதிய ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை எனக்கூறி மரண தண்டனையை ரத்து செய்ததோடு வழக்கில் இருந்தும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது