world

img

வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

ஜப்பானை சேர்ந்த சுசுமா கிடகவா, இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்டு ராப்சன், ஜோர்டானை சேர்ந்த உமர் யாகி ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு 2025ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.  இந்நிலையில், ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் 2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு திங்கள் முதல் அறிவிக்கப்படுகிறது. கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி மருத்துவத்திற்கான நோபல் பரிசு, மேரி பிரங்கோ, பிரட் ராம்ஸ்டெல் மற்றும் ஷிமொன் சகாகுச்சி ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 7-ஆம் தேதி இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜான் கிளார்க், மைக்கேல் எச்.டெவோரெட் மற்றும் ஜான் எம்.மார்டினிஸ் ஆகியோருக்கு 3 பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இன்று ஜப்பானை சேர்ந்த சுசுமா கிடகவா, இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்டு ராப்சன், ஜோர்டானை சேர்ந்த உமர் யாகி ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு 2025ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உலோக - கரிம கட்டமைப்பை (metal-organic frameworks) உருவாக்கியதற்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.