world

img

தீக்கதிர் உலக செய்திகள்

நேபாளத்தில் வெள்ளம்  பலி எண்ணிக்கை அதிகரிப்பு 

 நேபாளத்தில் பெய்துவரும் கனமழை வெள்ளத்தால் பல இடங்களில்  நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 60 ஐ கடந்துள் ளது. நிலச்சரிவுகளில் பலர் புதையுண்டுள்ள காரணத் தால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் வெள்ளத்தில் சிக்கியவர்களை ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் நேபாள ராணுவ வீரர்கள் மீட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரக்குகளுக்கு 25 சதவீதம் வரி நவம்பர் முதல் அமல்

டிரக்குகளுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரியானது அக்டோபர் 1 அன்றே நடைமுறைக்கு வரவேண்டிய நிலையில் அமலாக வில்லை. இந்நிலை யில் நவம்பர் மாதம் 1 முதல் அமலுக்கு வரும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப் பின் படி அமெரிக்கா விற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகையான நடுத்தர மற்றும் கனரக டிரக்குகள் மீதும் வரி அமலாகும் என  தெரி ிக்கப்பட்டுள்ளது. 

பாக் பயணிகள் ரயில் மீது பிரிவினைவாதிகள் தாக்குதல்  

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பலூச் விடுதலை ஆயுதக் குழுவினர் ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ரயிலின் 6 பெட்டி கள் தடம் புரண்டு கவிழ்ந்தன. இதில் பலர் படுகாயமடைந் துள்ளனர். உடனடி யாக சம்பவ இடத்து க்கு சென்ற மீட்புக் குழுவினர், பாதுகாப்புப் படையினர் மீட்புப்பணி யில் ஈடுபட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் இதே ரயில் கடத்தப்பட்டு 400 பயணிகள் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

5 சதவீத இலக்கை மட்டுமே  எட்டிய பாரீஸ் ஒப்பந்தம்

பாரீஸ் ஒப்பந்தம் கையெழுத்தாகிப் பத்து ஆண்டு கள் ஆகியுள்ள நிலையில் அது 5 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது. அதேசமயம் 20 சதவிகிதத் திற்கும் அதிகமான கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் முயற்சி நடவடிக் கைகள் நிறுத்தப் பட்டுள்ளன அல்லது செயலற்றுப் போய் விட்டன என எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீருக்கான கவுன்சில் நடத்திய ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் பாரீஸ் ஒப்பந்தத்தை அமல்படுத்த போதிய நிதி ஒதுக் கீடுகளும் இல்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

பிரிட்டனில்  மசூதிக்குத் தீவைப்பு 

பிரிட்டனில் மசூதி ஒன்றிற்கு இனவெறியர்கள் தீ வைத்துள்ளனர். இந்த சம்பவம் சிறுபான்மை மக்க ளுக்கு எதிராக இனவெறியைத் தூண்டும் விதமாக திட்டமிட்டு நடை பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப் பட்டுள்ள நிலை யில், காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. முகமூடி அணிந்த இருவர் மசூதிக்குள் நுழைய முயன்றதாகவும், அவர்கள் உள்ளே செல்ல முடியாத நிலையில் மசூதியின் படிக் கட்டுகளில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாகவும் மசூதி நிர்வாகம் தெரிவித்துள்ளது.