அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க், மைக்கேல் எச்.டெவோரெட் மற்றும் ஜான் எம்.மார்டினிஸ் ஆகிய 3 பேருக்கு 2025-ஆம் ஆண்டின் இயற்பிலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் 2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு திங்கள் முதல் அறிவிக்கப்படுகிறது. நேற்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு, மேரி பிரங்கோ, பிரட் ராம்ஸ்டெல் மற்றும் ஷிமொன் சகாகுச்சி ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க், மைக்கேல் எச்.டெவோரெட் மற்றும் ஜான் எம்.மார்டினிஸ் ஆகிய 3 பேருக்கு மின்சுற்றில் உள்ள Macroscopic Quantum Mechanical Tunnelling மற்றும் Energy Quantisation தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.