world

img

தீக்கதிர் உலக செய்திகள்

இந்தோனேசியா பள்ளி விபத்து பலி எண்ணிக்கை உயர்வு  

இந்தோனேசியாவில் கடந்த வாரம் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளை அகற்ற காலதாமதம் ஆன நிலையில் 50 மாணவர்கள் காணாமல் போயுள்ளனர் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் 50 பேரும் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது. மீட்புப் குழுவினர் கிட்டத்தட்ட அனைத்து இடிபாடுகளையும் அகற்றிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சூடான் உள்நாட்டுப்போரில் 32 பத்திரிகையாளர்கள் கொலை 

2023 இல் சூடானில் உள்நாட்டுப் போர் துவங்கியது முதல் 32 பத்திரிகையாளர்கள் சுட்டுப்படு கொலை செய்யப்பட்டுள்ளனர் என சூடான்  பத்திரிகையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் போர்க் குற்றங்கள் குறித்து எழுதுகிற  பத்திரிகையாளர்களை கைது செய்வது, தடுப்புக்காவலில் அடைப்பது, தாக்குவது என  500 க்கும் மேற்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.   

புலம்பெயர்ந்தோர் மீது வன்முறை:  அமெரிக்கர்கள் எதிர்ப்பு 

அமெரிக்காவில் போதிய ஆவணம் இன்றி புலம்பெயர்ந்து தங்கியுள்ள மக்களை டிரம்ப் நிர்வாகம் கைது செய்து வருகிறது. அவர்களை கைது செய்யும் அதிகாரிகள் மிக ஆக்ரோசமாக வீடுகளை உடைப்பது, அடிப்பது, கீழே தள்ளி மிதிப்பது, ரசாயனங்களை முகத்தில் வீசுவது என வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு வருகின்றனர். இது பதற்றத்தை உரு
வாக்குகிறது என மக்கள் குற்றம் சாட்டி வரு
கின்றனர். 

நிறுத்த உத்தரவிட்ட பிறகும் இஸ்ரேல் தாக்குதல் : பலி 70

போர் நிறுத்த முன்மொழிவுகளில் சிலவற்றை ஏற்பதாக ஹமாஸ் அறிவித்த பிறகு காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என டிரம்ப் கூறினார். ஆனால் 24 மணி நேரத்தில் 93 முறைக்கும் மேல் தாக்குதல் நடத்தி சுமார் 70 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் படுகொலை செய்துள்ளது. முன்மொழிவுகளின் படி பணயக் கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஆயத்தமாகியுள்ளது. ஆனால் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்துகிறது.    

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி  செயலாளர் வடகொரியா பயணம் 

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொ துச்செயலாளர் டூ லாம் வடகொரியா விற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி அக்டோபர் 9 முதல் 11 வரை வட கொரியாவிற்கு அரசு முறைப் பயணமாக டூ லாம் செல்வார். இப்பயணத்தில் கொரிய தொழிலாளர் கட்சியின் 80 ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்பார் என அறிவித்துள்ளது. இச்சந்திப்பில் இரு சோஷலிச நாடுகளுக்கு இடை யேயான உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.