states

img

உத்தரகண்ட்: மதரஸா வாரியத்தை கலைக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

உத்தரகண்ட் மாநிலத்தில் மதரஸா வாரியத்தை கலைத்து, அந்த பள்ளிகளை மாநில அரசின் கீழ் கொண்டு வரும் சிறுபான்மையினர் கல்வி மசோதா, 2025-க்கு மாநில ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) குர்மித் சிங் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால், மாநிலத்தின் அனைத்து மதரஸா பள்ளிகளும் மாநில பள்ளிக்கல்வி வாரியத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு, இப்பள்ளிகளில் 2026-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும்.