states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

சங் பரிவாரத்தால் வளர்க்கப்பட்ட வெறுப்பு விஷம் தற்போது உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி மீது கக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அறையில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது நடந்த வன்முறையை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதை ஒரு தனிப்பட்ட வன்முறைச் சம்பவமாக மதிப்பிட முடியாது. சங் பரிவாரத்தால் முன்வைக்கப்படும் வன்முறை அரசியலை ஆராய்ந்து அம்பலப்படுத்த வேண்டும்.

சிபிஐ பொதுச் செயலாளர் து.ராஜா

பீகார் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் அனைத்து தகுதியுள்ள வாக்காளர்களின் ‘வாக்களிக்கும் உரிமையை’ தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக நியாயமான தேர்தல்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் வெட்கக்கேடானது மற்றும் அருவருப்பானது. குறிப்பாக இந்தச் சம்பவம் நம் நாட்டின் நீதித்துறையின் கண்ணியம் மற்றும் சட்டத்தின் ஆட்சியின் மீதான தாக்குதல் ஆகும். நமது நீதித்துறையின் பாதுகாப்பு மிக முக்கியமானது. மிரட்டல் அல்ல. நீதியும் பகுத்தறிவும் மேலோங்கட்டும்.

ஆர்ஜேடி மூத்த தலைவர் மனோஜ் ஜா

முன்பு போல தேர்தல் ஆணையம் நடுவர் போன்று செயல்பட வேண்டும். ஒரு கட்சி போல நடந்து கொள்ளக்கூடாது. தேர்தல் காலங்களில் வெறுப்பை பரப்பும் நபர்களுக்கு எதிராக, தேர்தல் ஆணைய சட்ட விதிகளை பயன்படுத்த வேண்டும்.