states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஜம்மு -காஷ்மீரின் தோடா பகுதியில் திங்களன்று காலை 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 33.10 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 76.18 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

அறுவை சிகிச்சை செய்துகொண்ட நபர் ஒருவர் காப்பீட்டுதாரருக்கு காப்பீட்டு தொகை தர மறுத்த எல்ஐசி நிறுவனத்தை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான உத்தரவில் காப்பீட்டுத் தொகையை சிகிச்சைக்கு பின் வழங்க மறுப்பது ஒருவரின் வாழ்வுரிமைக்கு எதிரானது என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 பாஜக ஆளும் மத்தியப்பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் இருமல் மருந்து உட்கொண்டு உயிரிழந்த  குழந்தைகளின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்து உள்ளது.