உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீசி தாக்க முயன்ற சம்பவத்தை கண்டித்து உச்ச நீதிமன்ற வளாகத்தில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் (AILU) இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் காலணி வீசி தாக்க முயன்றார். அப்போது, நீதிமன்ற பாதுகாவலர்கள் துரிதமாக செயல்பட்டு அந்த நபரை தடுத்து அவரை வெளியேற்றினர். வெளியே சென்றபோது, ‘சனாதன தர்மத்தை அவமதித்தால் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்' என அந்த நபர் கூச்சலிட்டபடி சென்றார். இச்சம்பவத்தை தொடர்ந்து, பார் கவுன்சில் ஆப் இந்தியா அவரது வழக்கறிஞர் உரிமத்தை சஸ்பெண்ட் செய்தது.
இந்த நிலையில், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீசி தாக்க முயன்ற சம்பவத்தை கண்டித்து உச்ச நீதிமன்ற வளாகத்தில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் (AILU) இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், தாக்குதல் நடத்திய வழக்கறிஞர் மீது வழக்கு பதிந்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.