வலதுசாரிகளின் பேரணிக்கு பிறகு பிரிட்டனில் முஸ்லிம் வெறுப்புப் பிரச்சாரம் தீவிரம்
லண்டன்,அக்.7- பிரிட்டனில் கடந்த மாதம் நடந்த ‘யுனைட் தி கிங்டம்’ என்ற பெயரில் தீவிர வலது சாரிகளின் கும்பல் நடத்திய பேரணிக்குப் பிறகு முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் மேலும் தீவிரமடைந்துள்ளது. டெல் மாமா என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் இருந்து இது தெரிய வந்துள் ளது. இந்த வெறுப்புப் பிரச்சாரமானது பிரிட்டனில் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் மற்றும் புலம்பெயர்ந்த மக்களிடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளது எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 13 அன்று பிரிட்டனில் தீவிர வலதுசாரிகள் இனவெறி கும்பல்கள் இணைந்து ஒரு பேரணி நடத்தினர். இதில் 1,50,000 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்த கும்பல்களுக்கு ஆதரவாக இந்நிகழ்வை பல்வேறு ஊடகங்கள் மிக பிரம்மாண்டமாக ஒளி பரப்பி விளம்பரம் செய்தன. இந்த பேரணி நடைபெற்ற அடுத்த 7 நாட்களில் மட்டும் இங்கிலாந்தில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு ணர்வை தூண்டும் வகையிலான சுமார் 157 சம்பவங்கள் பதிவாகியுள்ளன என டெல் மாமா அமைப்பு தனது அறிக்கை யில் தெரிவித்துள்ளது. தாக்குதல் உள்ளிட்ட மோசமான சம்பவங்களால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் புலம் பெயர்ந்த மக்கள் தங்களை தாக்கியவர்கள் “இங்கிலாந்தை விட்டு வெளியேறு” “உங்கள் நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” என மிரட்டல்கள் விடுத்ததாகத் தெரிவித்துள்ளனர். அதே போல கடந்த ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் மட்டும் 17 பள்ளி வாசல்கள் மற்றும் இஸ்லாமிய மத நிறு வனங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மொத்தம் 913 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இந்த வெறுப்புப் பிரச்சாரத்தின் வெளிப் பாடாக தற்போதைய பிரதமர் ஸ்டார்மர் வலதுசாரிகள் இனவெறியர்களின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் குடியேற்றக் கொள்கையை மாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.