தில்லி நகரில் சுற்றித் திரியும் அனைத்து தெருநாய்களையும் 8 வாரங்களுக்குள் பிடித்து, உரிய வசதிகள் கொண்ட காப்பகங்களில் வைத்திட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாய்களால் ஏற்படும் தாக்குதல் சம்பவங்கள், குடிமக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு புகார்களை பரிசீலித்த நீதிமன்றம், நகராட்சி மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு இந்த உத்தரவை பிறப்பித்தது.
இதற்கான செயல்திட்டம், நிதி மற்றும் வசதி ஏற்பாடுகள் குறித்து விரிவான அறிக்கையை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நாய்களை காப்பகங்களில் வைக்கும் போது அவற்றின் உணவு, மருத்துவ சிகிச்சை, பராமரிப்பு ஆகியவற்றுக்கான தேவையான ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், மறுத்தரவு வரும்வரை நாய்களை விடுவிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது