court

img

மாநில அரசு கூடுதல் தேர்தல் அலுவலர்களை நியமிக்கலாம் - உச்சநீதிமன்றம்!

மாநில அரசுகள் தேவைப்பட்டால் கூடுதல் தேர்தல் அலுவலர்களை நியமிக்கலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்டவர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த கூடாது என தமிழக வெற்றிக்கழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையில் விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையில் தேர்தல் அலுவலர்கள் பற்றாக்குறை இருந்தாலோ அல்லது அவர்களுக்கு அதிக பணிச்சுமை இருந்தாலோ மாநில அரசு கூடுதல் பணியாளர்களை நியமிக்கலாம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.