திருப்பரங்குன்றத்தில் கலவரத்தில் ஈடிபட்ட இந்து முன்னணியினர் 13 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மலை மேல் உள்ள சிக்கந்தர் தர்கா அருகே தீபம் ஏற்ற வேண்டுமெனக் கோரி இந்து முன்னணியினர் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது கலவரக்காரர்கள் தாக்கியதில் போலீசாருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பேரிகார்டுகள் உடைக்கப்பட்டது.
இதனால் கலவரத்தில் ஈடுபட்ட நிலையில் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
