மிக இளம் வயதிலேயே மாணவர்களுக்கு பாலியல் கல்வியைக் கற்றுத்தர வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்தார். அவரது ஜாமீன் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் வழக்கில் நீதிபதிகள் சஞ்சய் குமார், அலோக் அராதே அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையில் மிக இளம் வயதிலேயே மாணவர்களுக்கு பாலியல் கல்வியைக் கற்றுத்தர வேண்டும் எனவும் மேல்நிலைப்பள்ளி பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி ஒரு பகுதியாக இருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.