court

img

ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கப் பணிகளுக்கு தடை!

ஆரவல்லி மலைத் தொடரை வரையறுக்கும் தனது முந்தைய தீர்ப்பை நிறுத்திவைத்துள்ள உச்ச நீதிமன்றம், முந்தைய வரையறையை மறுபரிசீலனை செய்ய உயர்மட்டக் குழு அமைக்க பரிந்துரைத்துள்ளது.
உலகின் மிகப் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றான ஆரவல்லி, தில்லிக்கு அருகில் தொடங்கி ஹரியானா, ராஜஸ்தான் வழியாக குஜராத்தின் அகமதாபாத் வரை சுமார் 700 கி.மீ நீளத்திற்குப் பரந்து விரிந்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய இயற்கை அரண்களுள் ஒன்றான இம்மலைத் தொடர், அதானி உள்ளிட்ட கனிம முதலாளிகளின் லாப வேட்டைக்காக தற்போது மரண விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ளது. புதிய வரையறை எனும் தொழில்நுட்பச் சதி ஆரவல்லி மலைகள் குறித்த தெளிவான வரையறை தேவை என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருந்த நிலையில், ஒன்றிய பாஜக அரசு ஒரு புதிய “தொழில்நுட்ப விளக்கத்தை” அளித்தது. அதன் படி,”100 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட குன்றுகள் மட்டுமே ஆரவல்லி மலைகளாகக் கருதப்படும்”.  அதேபோல இரு குன்றுகளுக்கு இடையே உள்ள இடைவெளி 500  மீட்டருக்குள் இருந்தால் மட்டுமே அப்பகுதி ஆரவல்லி மலைத்தொடரின் பகுதியாகக் கருதப்படும். இந்த ஆபத்தான ஒன்றிய அரசின் நிபுணர் குழு அளித்த வரையறையை உறுதி செய்து கடந்த நவம்பர் 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை தொடர்ந்து, இந்த உத்தரவு சுரங்க நடவடிக்கைகளுக்கு வழி வகுக்கும் என்றும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை இது மேலும் மோசமாக்கும் என்றும் பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஆரவல்லி மலைத் தொடரை வரையறுக்கும் தனது முந்தைய தீர்ப்பை நிறுத்திவைத்துள்ள உச்ச நீதிமன்றம், முந்தைய வரையறையை மறுபரிசீலனை செய்ய உயர்மட்டக் குழு அமைக்க பரிந்துரைத்துள்ளது.
இது குறித்து ராஜஸ்தான், ஹரியானா, குஜராத், தில்லி ஆகிய மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.