“மும்பையை விழுங்க 2 குஜராத்திகள் சதி” மகாராஷ்டிரா தலைநகர் மும்பை யை விழுங்க 2 குஜராத்திகள் சதி செய்து வருகின்றனர் என “இந்தியா” கூட்டணி யில் அங்கம் வகிக் கும் சிவசேனா கட்சி யின் தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டியுள் ளார். மும்பையில் நடைபெற்ற சிவ சேனா (உத்தவ்) நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் மேலும் கூறுகையில்,” மும்பை நமக்கு தானாகக் கிடைக்கவில்லை. மராட்டிய மக்களின் தியாகத்தால் கிடைத்தது. இதற்காக 107 தியாகிகள் அதிகாரப்பூர்வமாக உயிர் தந்துள்ளனர். உண்மையில் 250க்கும் மேற்பட்டோர் தங்கள் உயிர்களை மும்பைக்காக தியாகம் செய்துள்ளனர். ஆனால் இந்த மும்பையை 2 குஜராத்திகள் (மோடி, அமித் ஷா) விழுங்க நினைக்கிறார்கள். அன்று மும்பையைக் குஜராத்துடன் இணைக்க சதி நடந்தது. தற்போது மீண்டும் மும்பை நகரை குஜராத்திகள் அபகரிக்கப் பார்க்கிறார்கள். இதற்கு எதிராக நாம் உறுதியாக நிற்க வேண்டும். மகாராஷ்டிராவின் நலனுக்காக நான் எந்த நிலைக்கும் செல்ல தயார். ஆனால் மகாராஷ்டிரா சிறந்து விளங்க வேண்டும்” என உத்தவ் தாக்கரே பேசினார்.
