முஸ்லிம் மக்களிடையே மோதலை தூண்ட பாஜக ஆதரவு ரிபப்ளிக் தொலைக்காட்சி தீவிரம்
மும்பை பீகார் தேர்தல் வெற்றிக்குப் பின் ஆர் எஸ்எஸ் - பாஜக தலைமையிலான ஒன்றிய மோடி அரசு நாடாளுமன்றத்தில் மக்களு க்கு விரோதமான அணுசக்தி மசோதா, தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு அடாவடி மசோதாக்களை நிறைவேற்றியது. மேலும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தளம், விஎச்பி உள்ளிட்ட இந்துத்துவா கும்பல் முஸ்லிம், கிறிஸ்தவர்கள், தலித் மக்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. குறிப்பாக பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில்,“கோடி மீடியா (பாஜக ஆதரவு)” ஊடகங்களின் தலைமை உறுப்பினர் போல செயல்படும் அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் தொலைக்காட்சி முஸ்லிம் மக்களி டையே மோதலை தூண்டிவிடும் வகையில் ஒரு விவாத நிகழ்ச்சியை நடத்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை அலுவலகத்தில் 2 முஸ்லிம் அமைப்புகளுக்கு இடையே விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. அர்னாப் கோஸ்வாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் - பாஜக ஆதரவு முஸ்லிம் அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்சின் உறுப்பினர்கள் மற்றும் மற்றொரு முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்த அமைப்பின் உறுப்பினர்கள் என 2 குழுக்கள் பங்கேற்றன. ஆனால் 2 குழுக்களுமே ஆர் எஸ்எஸ் - பாஜக அரசுக்கு நெருக்கமானவை ஆகும். முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் தரப்பினர் வெளிப்படையாகவே பாஜகவின் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறை கொள்கை களை ஆதரித்துப் பேசினர். மற்றொரு குழுவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல பாசாங்கு செய்ய இந்த “நிழல் யுத்தம்” கடும் வாக்கு வாதத்துடன் மோதலாக வெடித்தது. வலுக்கும் கண்டனம் உண்மையான முஸ்லிம் பிரதிநிதிகள் அல்லது இஸ்லாமிய அறிஞர்களை விவா தத்திற்கு அழைக்காமல், தங்களுக்குச் சாதக மான குழுக்களை வைத்துக் கொண்டு அர்னாப் கோஸ்வாமி பாஜக - ஆர்எஸ்எஸ்ஸுக்கு ஆதர வாக, முஸ்லிம் மக்களிடையே மோதலை தூண்டும் வகையில் ஒரு நாடகத்தை நடத்தி யுள்ளார் என அரசியல் விமர்சகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவா தத்தில் பங்கேற்ற இரு தரப்பினருமே பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்ற நிலை யில், நாட்டில் முஸ்லிம் மக்களிடையே மோதலை தூண்டவே பாஜக ஆதரவு ரிபப்ளிக் தொலைக் காட்சி இந்த நிகழ்ச்சியை நடத்தியுள்ளது என சமூகவலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
