தில்லியில் விமானம், ரயில் சேவை பாதிப்பு
தில்லியில் காற்றின் தரம் மேலும் மோசமடைந்து வருகிறது. பல இடங்களில் ‘அபாயகரமான’ நிலையை எட்டியுள்ளது. கடும் பனி மூட்டம் மற்றும் குறைவான காற்று வேகம் காரணமாக காற்று மாசு மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் விமான சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. தில்லியிலிருந்து சென்னை, கொல் கத்தா, பெங்களூரு உள்ளிட்ட நகரங்க ளுக்கு விமான சேவைகள் ரத்தாயின. 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாம தமாகின. சில விமானங்கள் ஜெய்ப்பூர் அல்லது லக்னோ போன்ற அருகி லுள்ள நகரங்களுக்கு திசைதிருப்பப் பட்டுள்ளன. விமானங்கள் ரத்து மற்றும் தாமதத்தால் பயணிகள் நீண்ட நேரம் விமான நிலையத்திலேயே காத்தி ருக்கும் சூழல் ஏற்பட்டது. அதே போல தில்லியிலிருந்து பல்வேறு நகரங்களுக்கான ரயில் சேவை கடும் பனிமூட்டம் காரணமாக தாமதமா னதால் பயணிகள் கடும் அவதி அடைந்த னர்.