tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் மூத்த தலைவர் பிருந்தா காரத்

பாலியல் குற்றவாளி குல்தீப் செங்காரின் ஜாமீனுக்கு தடை விதித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். இது நாடு முழுவதும் உள்ள பெண்களுக்குக் கிடைத்துள்ள ஒரு நிம்மதியாகும். இந்த உத்தரவு நீதிக்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் ஆதரவாக அமைந்துள்ளது.

மூத்த பத்திரிகையாளர் பியூஸ் ராய்

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பிரதமர் மோடியைத் திட்டியதாகக் கூறி, ஒரு பெண்ணை இந்துத்துவா  கும்பல் வழிமறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. மேலும் அந்தப் பெண்ணை “பயங்கரவாதி” என்று அழைப்பதோடு, மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டி மிரட்டுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பான மோடியின் இந்தியா.

மூத்த பத்திரிகையாளர் ராணா அய்யூப்

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் நடக்கும் கும்பல் கொலைகள் வெறும் சமூகத்தின் தோல்வி மட்டுமல்ல, அவை தலைமையின் தோல்வி ஆகும். அதிகாரத்தில் இருப்பவர்கள் மத அடிப்படைவாதத்திற்கு அங்கீகாரம் அளிக்கும்போது, சாதாரணக் கும்பல் மரண தண்டனையை நிறைவேற்றும் கொலையாளிகளாக மாறுகிறது.

மகளிர் காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா

குல்தீப் செங்காரின் ஜாமீனுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பது பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் கிடைத்துள்ள வெற்றியாகும். இந்த போராட்டத்தை பலவீனப்படுத்த நினைத்தவர்களின் முகத்தில் விழுந்த ஒரு அறையாகவே இதைப் பார்க்கிறேன்.