court

img

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த  எம்.பி.க்கு சிறைத்தண்டனை.... சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு...

ஹைதராபாத்:
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வழக்கில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் பெண் எம்.பி.க்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மெகபூபா பாத் தொகுதியில் தெலுங்கானா ராஷ்டிரியசமிதி கட்சியின் வேட்பாளர் மலோத்து கவிதா போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவர் தேர்தலின் போது வாக்காளர்களுக்குப் பணம் அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கவிதா மீது வழக்கு பதியப்பட்டது.  இந்த வழக்கை தெலுங்கானா மாநிலம் நம்பள்ளியில் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.  விசாரணையில் தேர்தலின் போது கவிதா வாக்காளர்களுக்குப் பணம்  கொடுக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டது.  இதைத்தொடர்ந்து கவிதாவுக்கு 6 மாதங்கள்  சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.   மேலும் பணம் அளித்ததில் உதவியாக இருந்த அவரது உதவியாளருக்கும் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது.