சென்னை,பிப்.10- கைதிகளுக்கு விடுப்பு வழங்குவதில் எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருக்கும் போது, தண்டனைக் கைதிகளுக்குச் சாதாரண விடுப்போ அல்லது அவசர கால விடுப்போ வழங்க எந்தத் தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள கைதிகள் தொடர்ந்த வழக்கில் எஸ்.எம். சுப்பிரமணியன், தமிழ்செல்வி மற்றும் சுந்தர்மோகன் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு.