அலகாபாத்,மார்ச்.20- 11 வயது குழந்தையைப் கடத்தி பாலியல் வன்கொடுமை முயற்சி வழக்கில் அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பு கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
11 வயது குழந்தையைப் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய இருவர் முயற்சித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பவன், ஆகாஷ் ஆகிய இருவரும் குழந்தையின் மார்பகங்களைப் பிடித்து அங்கிருந்த வாய்க்காலின் கீழ்ப்பகுதிக்கு அழைத்துச் சென்று அவரது ஆடைகளை அவிழ்த்துள்ளனர் அதற்குள் அங்கு ஆட்கள் வந்தததையடுத்து குழந்தையை விட்டுவிட்டு இருவரும் தப்பித்து ஓடினர்.
இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயணன், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தனர் என்பதை நிரூபிக்க இந்த உண்மை மட்டுமே போதுமானதாக இல்லை. ஏனெனில், இந்த உண்மைகளைத் தவிர, பாலியல் வன்கொடுமை செய்ய வேறு எந்த செயலையும் அவர்கள் செய்யவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில், முதன்மை குற்றச்சாட்டாக பாலியல் வன்கொடுமை முயற்சி இல்லை என்றும் அதற்கு பதிலாக, பெண்ணைத் தாக்குதல், நிர்வாணப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி ராம்மனோகர் நாராயண் மிஸ்ராவின் திர்ப்பு கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.