cinema

img

நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்!

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் (46) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
யூடியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமான நடிகர் பிஜிலி ரமேஷ், சினிமாவில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். இவர், கோலமாவு கோகிலா, நட்பே துணை, கோமாளி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக கல்லீரல் பிரச்சனையால் பிஜிலி ரமேஷ் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார் என்று அவரது குடுமபத்தினர் தெரிவித்துள்ளனர்.